• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பெயர் - வெளியான அப்டேட்!

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பெயர் - வெளியான அப்டேட்!

மாஸ்டர்

மாஸ்டர்

  • Share this:
    மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் பெயர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம், கத்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்தில் விஜய் கதாபாத்திரத்துக்கு ஜேம்ஸ் துரைராஜ் என்றும், விஜய் சேதுபதிக்கு பவானி என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

    படப்பிடிப்பு முடிவடையாத நிலையில் படத்துக்கான 70 சதவிகித வியாபாரம் முடிவடைந்திருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடைவிடுமுறையை முன்னிட்டு வெளிவர இருக்கும் இத்திரைப்படத்துக்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: கவிதையில் வாழ்த்தி காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: