வாத்தி கமிங்... கொளுத்துங்கடா... மாஸ்டர் 2-வது பாடல் ரிலீஸ்!
- News18 Tamil
- Last Updated: March 10, 2020, 5:23 PM IST
மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கானா பாலச்சந்தர் எழுதியிருக்கும் இப்பாடலில் கானா பாடல்களில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. விஜய் குரலில் வெளியான ‘குட்டி ஸ்டோரி’ பாடல் ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் கொடுப்பது போல் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவதாக வெளியாகியிருக்கும் ‘வாத்தி கமிங்’ பாடல் குத்துப் பாடலாக அமைந்துள்ளது.
பாடல் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெறச் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் பாடலை விஜய் நடனத்துடன் திரையரங்கில் காண ஆர்வமாக இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.