தமிழகம் முழுவதும் விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெளியானதையொட்டி, அதிகாலையிலேயே ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஆண்டு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் போஸ்டருக்கு Coca-Cola ஊற்றி ரசிகர் ஒருவர் அபிஷேகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் மாஸ்டர் திரைப்படத்திற்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட் அவுட்மீது பாட்டிலில் அடைக்கப்பட்ட Coca-Colaவை வாங்கி ரசிகர் ஒருவர் உயரத்தில் ஏறி நின்று பால் அபிஷேகம் செய்வது போல் Coca-Colaவை ஊற்றி அபிஷேகம் செய்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.