• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாஸ்டர் படக்குழுவின் புதிய அதிரடி அறிவிப்பு!

மாஸ்டர் படக்குழுவின் புதிய அதிரடி அறிவிப்பு!

மாஸ்டர்

மாஸ்டர்

  • Share this:
    மாஸ்டர் படத்தின் வெளியீட்டு உரிமையை 7 ஸ்கிரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய்யின் 64-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

    இதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் விஜய் சேதுபதி - விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

    விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்திருக்கிறது. சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.

    இந்நிலையில் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் மாஸ்டர் படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைப் பார்த்த ரசிகர்கள் செகண்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.



    மேலும் படிக்க: Exclusive | நாங்கள் பிரிந்து விட்டோமா... நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஒரே பதில்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: