Home /News /entertainment /

மாஸ்டர் படத்தின் அசூர வெற்றி: திரையரங்குகளில் வெளியாக வரிசைகட்டும் படங்கள்

மாஸ்டர் படத்தின் அசூர வெற்றி: திரையரங்குகளில் வெளியாக வரிசைகட்டும் படங்கள்

மாஸ்டர்

மாஸ்டர்

மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றி எதிரொலியாக பெரிய படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றிபெற்றுள்ளது. திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனைக்கு மத்தியில் படம் வெளியானாலும், தமிழக அளவில் இதுவரை 100 கோடியும் ஒட்டுமொத்தமாக 200 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து தியேட்டரா, ஓடிடியா என்ற குழப்பில் இருந்த பெரிய நடிகர்கள் பலரும் தங்களது படங்களை திரையரங்குகளிலேயே வெளியிட ஆயத்தமாகி வருகின்றனர். இதில் முதலாவதாக தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் தியேட்டரில் வெளியாக உள்ளது. ஏற்கெனவே பல ஓடிடி நிறுவனங்கள் அணுகியபோதும் தியேட்டரில்தான் ரிலீஸ் என காத்திருந்த படக்குழுவிற்கு மாஸ்டர் வெற்றி புதிய உற்சாகத்தை தந்துள்ளது. அத்துடன் திரையரங்க உரிமையாளர்களும் அதிக தியேட்டர்கள் ஒதுக்குவதாகக் கூறியுள்ளது ஜகமேதந்திரம் படக்குழுவை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

    இதேபோல் கார்த்தியின் சுல்தான் படத்தையும் வாங்க ஓடிடி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வந்தன. ஆனால் அதை புறந்தள்ளி ஏப்ரலில் படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யும் பணியை படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சிவகார்த்தியேனின் டாக்டர் படமும், மாஸ்டர் படம் போலவே அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மாஸ்டருடன் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் படமும் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதால் இது சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாகதான் சிபிராஜின் கபடதாரி, ஜீவாவின் களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் தைப்பூசத்திற்கும் யோகிபாபுவின் ட்ரிப் பிப்ரவரி 5-ம் தேதியும் அடுத்தடுத்து தியேட்டரில் வெளியாக வரிசைக்கட்டி நிற்கின்றன.

    மாஸ்டர் வெற்றி கோலிவுட் மட்டுமல்ல பாலிவுட் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த சல்மான் கானின் ராதே படமும் ஓடிடி-யை ஓரங்கட்டிவிட்டு விரைவில் தியேட்டரில் வெளியாக தயாராகி வருகிறது.

    ஒட்டுமொத்தத்தில் ஓடிடிக்கு செல்ல இருந்த பல பெரிய நடிகர்களின் படங்களை தியேட்டருக்கு கொண்டு வரும் பணியை அசால்ட்டாக செய்துள்ளது விஜயின் மாஸ்டர் என திரையுலகினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Actor vijay, Master

    அடுத்த செய்தி