மாஸ்டர் திரைப்பட கதைக்கு உரிமை கோரி விண்ணப்பம்

மாஸ்டர் திரைப்பட கதைக்கு உரிமை கோரி விண்ணப்பம்

மாஸ்டர் பட ஸ்டில்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்பட கதைக்கு உரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’ . கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.

கொரோனா ஊரடங்கால் 2020 -ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் நவம்பர் மாதத்தில் தான் திறக்கப்பட்டன. அப்போது 50% இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகாததால் தியேட்டருக்கு அதிக அளவில் மக்கள் வரவில்லை. இதனால் பெரும்பாலான திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் 100% இருக்கைகளை நிரப்பலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட திரைத்துறையே மகிழ்ச்சியில் உள்ளது. ஆனாலும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 100% இருக்கைகளை நிரப்ப அனுமதி கொடுத்தது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு 100 சதவீத இருக்கைகளை அனுமதித்திருப்பது விதிமீறல் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க: வீட்டை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் போலீசில் புகார்

இதுஒருபுறமிருக்க மாஸ்டர் படக்குழு தினந்தோறும் வெளியிட்டு வரும் ப்ரமோ வீடியோக்களைப் பார்த்து பூரிப்பில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். மேலும் படத்தின் விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் மாஸ்டர் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் கதைக்கு உரிமை கோரி படக் குழுவினர் சார்பில் டெல்லியில் உள்ள மத்திய அரசின் பதிப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இங்குள்ள திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கதையை பதிவு செய்யும் முறைதான் இருந்து வருகிறது. டெல்லியில் உள்ள பதிப்புரிமை அலுவலகத்தில் கதையை பதிவு செய்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறதுஉடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: