Home /News /entertainment /

OTT யில் வெளியானது மாஸ்டர் திரைப்படம்

OTT யில் வெளியானது மாஸ்டர் திரைப்படம்

மாஸ்டர்

மாஸ்டர்

மாஸ்டர் திரையரங்குகளுக்கு வந்து 15 நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திரையரங்குகளுக்கு வந்து 15 நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரப்படம் இன்று ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

    திரைப்படம் திரையில் வெளியாகி, 50 நாட்களுக்கு பின்னரே OTTயில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

    பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 15 நாட்களுக்குள்ளாக இன்று தேதி ஒடிடியில் வெளியானது. இது வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வாகும். பொதுவாக திரையில் வெளியாகும் திரைப்படங்கள் திரையில் இருந்து வெளியேறிய பின்னர் மட்டுமே ஒடிடியில் வெளியாகும். ஆனால் மாஸ்டர் திரைப்படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஒடிடி தளத்திலும் வெளியாக இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமென்ற கோணத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    அந்த ஆலோசனை கூட்டத்தில், இனி அனைத்து படங்களுமே திரையில் வெளியிடப்பட்டு 50 நாட்களுக்குப் பின்னர்தான் ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொள்ளும் தயாரிப்பாளர்களின் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியிடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. மாஸ்டர் படத்தின் மூன்றாவது வார வசூலை திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் பங்கிட்டுக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தயாரிப்பாளருக்கு பங்கு தரப்படமாட்டாது.

    மேலும் படிக்க... சினிமாவை மிஞ்சிய தாய்மாமன் சீர்... ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்ற கிராமத்தினர்

    சிறிய பட்ஜெட் திரைப்படங்களை திரையில் வெளியிட்டு 30 நாளில் ஓடிடி தளத்தில் வெளியிட்டு கொள்ளலாம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Acor Vijay, Actor vijay sethupathi, Master, OTT Release

    அடுத்த செய்தி