மாஸ்டர் வெளியான தியேட்டரில் கொரோனா விதிமுறை மீறல் - போலீஸ் வழக்குப் பதிவு

மாஸ்டர் வெளியான தியேட்டரில் கொரோனா விதிமுறை மீறல் - போலீஸ் வழக்குப் பதிவு

கோப்பு படம்

மாஸ்டர் வெளியான தியேட்டரில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கிறது.

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டருக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இன்று அதிகாலை 4 மணி முதலே மாஸ்டர் வெளியான தியேட்டர்கள் விழாக்கோலம் பூண்டன. திரையரங்குக்கு முன்னர் அதிக அளவில் கூட்டம் கூடக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுகள் எல்லாம் ரசிகர்களின் செவிகளுக்கு எட்டியதாக தெரியவில்லை.

இந்நிலையில் சென்னையில் உள்ள காசி திரையரங்கம் 100% இருக்கைகளை நிரப்பி கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தொற்று நோய் பரவல் சட்டம் மற்றும் அரசு உத்தரவை மீறுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனர்.

இதே போல் கொரோனா விதிமுறைகளை மீறி வேறு திரையரங்குகள் செயல்படுகிறதா என்பதை போலீசார் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க: பிக்பாஸ் ஃபைனலுக்கு முன் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் யார்?

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் ரெய்டு விடுவதுதான் மாஸ்டர் படத்தின் மையக்கரு.படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த பலரும் பொங்கலுக்கு சரியான விருந்தாக மாஸ்டர் படம் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: