திரையரங்க உரிமையாளர்களுக்கு 'மாஸ்டர்’ தயாரிப்பாளர் கொடுத்த பரிசு!

மாஸ்டர்

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது.

  • Share this:
    எதிர்பார்த்தபடி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் கொரோனா தொற்றுநோய் பயத்தை மறக்கச் செய்து, பார்வையாளர்களை மீண்டும் தியேட்டருக்கு அழைத்து வந்துள்ளது.

    பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு தீர்வு தரும் விதமாக மாஸ்டர் திரைப்படத்தின் 3-வது வார திரையரங்கு வசூலை திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் பிரித்துக் கொள்ள அனுமதியளித்து மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவால் பரிணாம வளர்ச்சி அடையும் திரைத்துறை

    பல்வேறு OTT தளங்களில் இருந்து பெரும் சலுகைகள் வந்தபோதிலும், படத்தை முதலில் திரையரங்குகளில் வெளியிடும் முடிவில் விஜய் மற்றும் 'மாஸ்டர்' தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தனர். அவர்களின் இந்த முடிவுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர். அதோடு மாஸ்டர் திரைப்படம் சினிமா துறையை புதுப்பித்துள்ளது. இருப்பினும், ஆரம்பகால OTT வெளியீடு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் சினிமா ஆர்வலர்கள் தியேட்டர்களில் படத்தை ரசிப்பதை தடுக்க முடியாது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த வார இறுதியின் முன்பதிவு இன்னும் வலுவாக உள்ளது.

    OTT யில் வெளியானது மாஸ்டர் திரைப்படம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' படத்தில் பேராசிரியராக விஜய்யும், அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களுக்கு இடையேயான ஆக்‌ஷன் காட்சிகள் நன்றாகவே வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: