மும்பையில் களைகட்டிய ‘மாஸ்டர்’ கொண்டாட்டம்
மும்பையில் உள்ள விஜய் ரசிகர்கள் மாஸ்டர் ரிலீஸ் நாளில் சானிடைசர் மற்றும் செடி கொடுத்து கோலாகலமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாஸ்டர் முதல் நாள் கொண்டாட்டம்
- News18 Tamil
- Last Updated: January 13, 2021, 10:51 AM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கிறது.
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டருக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் ரெய்டு விடுவதுதான் மாஸ்டர் படத்தின் மையக்கரு.
படத்தின் முதல் நாள் முதல் காட்சியை திருவிழா போல் கொண்டாடி வரும் ரசிகர்கள் பொங்கலுக்கு சரியான விருந்தாக மாஸ்டர் படம் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கார்னிவல் திரையரங்கில் மாஸ்டர் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு சானிடைசர் மற்றும் செடி கொடுத்து வரவேற்றனர் ரசிகர்கள்.
மேலும் பேண்டு வாத்தியம் மற்றும் வானுயர கட் அவுட்களும் திரையரங்கின் முன்பு வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் ரசிகர்கள். தமிழகத்தைப் போல மும்பையிலும் மாஸ் காட்டி வருகின்றனர் மாஸ்டரின் தீவிர ரசிகர்கள்.
மேலும் படிக்க: வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறார் விஜய் சேதுபதி - மாஸ்டரை புகழும் ஈஸ்வரன் இயக்குநர்
மேலும் படிக்க: Master Review - மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்
2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து மூடப்பட்ட திரையரங்குகள் நவம்பர் மாதத்தில் தான் திறக்கப்பட்டன. பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வராததால் அதிக அளவில் தியேட்டருக்கு வராத ரசிகர்களை மீண்டும் வரவழைத்திருக்கிறது ‘மாஸ்டர்’ திரைப்படம்.

Maharashtra: Fans of actor Vijay celebrate outside Carnival Cinemas in Wadala, Mumbai as his film 'Master' releases today. They also distributed hand sanitisers and saplings with posters of 'Master' on the bottles and pots. pic.twitter.com/M0XysSZHOS
— ANI (@ANI) January 13, 2021