மாஸ்டர் பட நடிகை சொன்ன வலிமை அப்டேட்

விஜய் | அஜித்

வலிமை அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியிருக்கிறார் நடிகை சங்கீதா.

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சரியான நேரத்தில் அறிவிப்பு வரும் என்று படக்குழு தெரிவித்திருந்தாலும் ரசிகர்கள் விட்டபாடில்லை.

சமீபத்தில் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக சந்தித்த ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் பற்றி கேட்டதையும் அதற்கு அஜித் சொன்ன பதிலையும் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அதில், பிப்ரவரி மாதம் அனைத்து தகவல்களும் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் படம் 90 சதவிகிதத்துக்கும் மேலாக முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளிவரும் என்றும் நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் நண்பர் மதி என்ற கேரக்டரில் நடித்தவர்.வலிமை படத்தில் தான் நடித்திருப்பதாக கூறும் சங்கீதா, அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எனக்கு கிடைக்கவில்லை என்றும், இயக்குநர் வினோத் உடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: