தனுஷின் 43-வது படத்தில் இணைந்த மாஸ்டர் மகேந்திரன்

கார்த்திக் நரேன் உடன் நடிகர் மகேந்திரன்

தனுஷின் 43-வது படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் இணைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 • Share this:
  தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர்ண்ன்’ திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் தனது 43-வது படத்தில் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

  இந்நிலையில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மகேந்திரனை ரசிகர்கள் கொண்டாடினர். மாளவிகா மோகன் மற்றும் மகேந்திரன் ஆகிய இரண்டு மாஸ்டர் பட நடிகர்கள் தற்போது தனுஷின் 43-வது படத்தில் இணைந்திருக்கின்றனர்.  இந்தப் படத்தில் தனுஷின் காட்சிகள் கிட்டத்தட்ட படமாக்கி முடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட படத்தின் ஷூட்டிங்கிற்காக தனுஷ் அமெரிக்கா சென்றுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: