ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் - இதுவரை எந்த தமிழ் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு!

ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் - இதுவரை எந்த தமிழ் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு!

மாஸ்டர்

மத்திய அரசின் ஆலோசனையின்படி மீண்டும் 50% இருக்கையை நடைமுறைப் படுத்தியுள்ளது.

 • Share this:
  இதுவரை வேறெந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு, ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

  நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் ஜனவரி 13-ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. மாஸ்டர் படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் அவசரத்தில் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் எந்தவொரு தமிழ் படத்திற்கும் இல்லாத அளவுக்கு அதிக ஷோ-க்கள் விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு கிடைத்துள்ளதாம். 'மாஸ்டர்' படத்திற்கான எதிர்பார்ப்பு மற்ற நாடுகளிலும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைக்கும் விதத்தில், முதல் நாளில் கிட்டத்தட்ட 220 ஷோக்கள் திரையிடப்படுகின்றன.

  இதற்கிடையில், மத்திய அரசின் ஆலோசனையின்படி மீண்டும் 50% இருக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளதுதமிழக அரசு. மாஸ்டருக்கு பிறகு சிம்புவின் 'ஈஸ்வரன்' வெளியாவதால், முதல் நாளில் எல்லா திரைகளிலும், மாஸ்டர் திரையிடப்படும் எனத் தெரிகிறது.

  தவிர, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், மாஸ்டர் படத்தின் ப்ரோமோவை வெளியிட்டு வருகிறார்கள். விஜய் பேராசிரியராக நடிக்கும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: