நான் சிரித்ததால் தான் அந்தக் காட்சியை நீக்கினார்களா - மாஸ்டர் நடிகை விளக்கம்

மாஸ்டர்

மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி குறித்து பரவிய தகவலுக்கு நடிகை கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட பின்னரும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் அமேசான் ப்ரைம் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டன. அதில், நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு பெண்களின் உடைதான் காரணம் என்று கூறும் பெரும்பான்மை சமூகத்தின் மனநிலைக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பார் பேராசிரியர் ஜே.டி(விஜய்)

இப்படிப்பட்ட ஒரு காட்சியை ஏன் படத்திலிருந்து நீக்கினீர்கள் என்று பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதேவேளையில் அக்காட்சியில் விஜய் சீரியஸாக நடிக்கும் போது சவிதாவாக நடித்திருந்த கவுரி சிரிப்பதால் தான் டெலிட் செய்யப்பட்டதாக பரவலாக பேச்சு எழுந்தது.இதுகுறித்து இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் கவுரி கிஷன், “என்னைப் பொறுத்தவரை இயக்குநரின் முடிவை மதிக்கிறேன். கதைக்கு தேவைப்பட்டிருந்தால் அதை வைத்திருப்பார். டீசரில் அந்தக் காட்சி இடம்பெற்றிருக்கும். படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் அமேசான் ப்ரைம் அந்த வீடியோவை வெளியிட்ட போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

இந்தக்காட்சி வெளியிட்ட பின்னர் நான் சிரித்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதனால் தான் அந்த சீன் நீக்கப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என்றே நினைக்கிறேன். சில கோணங்களில் பார்க்கும் போது நான் சிரிப்பது போல் தவறாக தெரிந்திருக்கும். அந்தக் காட்சி தவறாக, நான் சிரிப்பது போல் இருந்திருந்தால் அதற்கு பின்னணி குரல் கொடுத்து டப் செய்திருக்க மாட்டார்கள். எடிட்டிங்கில் அந்த சீன் இருந்தது” இவ்வாறு நடிகை கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: