இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலா ? தியேட்டரை தெறிக்கவிடும் ‘மாஸ்டர்’

மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களில் சுமார் 43 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

  • Share this:
    பொங்கலை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசியராக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தனது அசால்ட்டான நடிப்பினால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

    இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் 24 மணி நேரத்தில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

    இந்நிலையில் இரண்டாவது நாளில் மாஸ்டர் திரைப்படம் தமிழகம் முழுவதும் ரூ.18 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.1.21 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.1.05 கோடியும் வசூல் ஆகியுள்ளது. 2 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.43 கோடியை வசூலித்து மாஸ்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

    திரையரங்கு உரிமையாளர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் படத்தை வெளியிட்டால் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என்று குழம்பி போய் இருந்த நிலையில், இந்த வசூல் நிலவரம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக கூறப்படுகிறது.
    Published by:Tamilmalar Natarajan
    First published: