பொங்கலை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசியராக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தனது அசால்ட்டான நடிப்பினால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் சாந்தனு, அர்ஜூன் தாஸ் என பல நட்சத்திரங்கள் மாஸ்டர் படத்தில் தங்களின் நடிப்பினை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
மாஸ்டர் திரைப்படம் வெளியாகிய 24 மணி நேரத்தில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இதுவரை சுமார் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.இது திரையரங்க உரிமையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்ட வீடியோவை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
You must have enjoyed the action scenes in Master! But here's a glimpse into what happened during 'Take. . . Action!' 🎥
அதில் ‘ நீங்கள் படத்தில் இடம் பெற்றிருந்த ஆக்ஷன் காட்சிகளை விரும்பி இருப்பீர்கள்.ஆனால் இந்த ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் படமாக்கப்பட்டது எனக் கூறி இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.