Home /News /entertainment /

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு

விஜய் உடன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

விஜய் உடன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் மீது காப்புரிமை சட்டத்தின் படி சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்தார். பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த மார்ச் மாதம் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தெறி, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களின் பாடல்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

விஜய் நிகழ்ச்சிக்கு வரும் போதும், விஜய் சேதுபதி வரும் போதும் இந்த பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். இந்த பாடல்களின் உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அதற்கான காப்புரிமையை நோவெக்ஸ் கம்யூனிகேசன் என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

இந்திய காப்புரிமைச் சட்டப்படி பாடல்களை காப்புரிமை பெற்றுள்ள நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தக் கூடாது என்பதால், மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்காததால் சிபிசிஐடியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்பு பிரிவில் நோவெக்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணை முடிவில்‘மாஸ்டர்’ தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் காப்புரிமை சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் மீது அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Master

அடுத்த செய்தி