பேருல மட்டும் இடம் கொடுக்கல; மனசுலயும் குடுத்துட்டு இருக்காரு...! விஜய் பேச்சு

Master Audio Launch | Vijay | "ரசிகர்களுக்கு இருக்கும் வருத்தம் எனக்கும் இருக்கிறது"

பேருல மட்டும் இடம் கொடுக்கல; மனசுலயும் குடுத்துட்டு இருக்காரு...! விஜய் பேச்சு
விஜய்
  • News18
  • Last Updated: March 16, 2020, 6:28 AM IST
  • Share this:
தனது நண்பர் அஜித் போன்று தானும் கோட் சூட் போட்டு வந்துள்ளதாக மாஸ்டர் திரைப்பட ஆடியோ விழாவில் நடிகர் விஜய் பேசியது, இரண்டு நடிகர்களின் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் ஐ.டி. ரெய்டு இல்லாத தனது பழைய வாழ்க்கையை விரும்புவதாகவும் விஜய் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக தனது திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களில், விஜய் பேசும் கருத்துகள், சமூகம் மற்றும் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையாகி வருகின்றன. இந்தநிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது.

இதில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பேசி முடித்த பின்பு இறுதியாக பேசிய நடிகர் விஜய், எவ்வளவு இன்ப, துன்பங்கள் வந்தாலும், ஒரு நதி போல அமைதியாக ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் எனவும், உண்மையாக இருக்கவேண்டும் என்றால் சில நேரங்களில் ஊமையாக இருக்கவேண்டும் என்றும் தனது ரசிகர்களுக்கு பன்ச் அட்வைஸ் வழங்கினார்.


தனது பேச்சின் தொடக்கத்தில், “இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் வர முடியாமல் வருத்தப்படுற அதே வருத்தம் எனக்கும் அதைவிட இருக்கு. ரசிகர்களுக்கு இருக்கும் வருத்தம் எனக்கும் இருக்கிறது” என்று கூறினார்.

மேலும், “விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதை தவிர்த்திருக்கலாம். ஏன், இந்த ஸ்கிரிப்ட்டுக்கு ஒத்துக்கிட்டிங்கனு அவர்கிட்ட கேட்டேன். ‘எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அவ்வளவுதான்னு’ சொன்னாரு. அப்போ தான் தெரிஞ்சது, அவரு பேருல மட்டும் இடம் கொடுக்கல. மனசுலயும் குடுத்துட்டு இருக்காரு” என்றும் விஜய் பேசினார்.

”ஹார்ட் வொர்க் ஸ்மார்ட் வொர்க்கும் சேர்த்து பண்ணுனா வெற்றி நிச்சயங்கிறதுக்கு லோகேஷ் ஒரு உதாரணம்” என்றும் படத்தின் இயக்குநர் பற்றி விஜய் பேசினார்.தொடர்ந்து தான் அணிந்து வந்த கோட் சூட் ஆடை பற்றி பேசிய விஜய், ஒவ்வொரு முறையும் தான் மோசமாக டிரெஸ் செய்து வருவதால், இம்முறை நண்பர் அஜித்குமாரை போல் ஸ்டைலா கோட் சூட் அணிந்து வரவேண்டும் என்று நினைத்ததாக குறிப்பிட்டார். மேலும் ரசிகர்களிடம் கோட் சூட் நன்றாக இருக்கா என்று கேட்டதும், ரசிகர்கள் ஆரவாரம் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது.வருமான வரித்துறை சோதனையை நினைவுகூர்ந்த விஜய், ஐ.டி. ரெய்டு எல்லாம் இல்லாத பழைய விஜய்யின் வாழ்க்கையை விரும்புவதாகவும், அதனை திருப்பி வாழ ஆசைப்படுவதாகவும் கூறினார். விஜய் அணிந்து வந்த கோட், சூட் படங்கள் மற்றும் அவர் கூறிய "நண்பர் அஜித்" என்ற வார்த்தை ட்விட்டரில் இந்திய அளவில் முதன்மையாக டிரெண்டிங் ஆகியுள்ளது.

Also See:

‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் கொடுத்த சர்ப்ரைஸ்!


‘மாஸ்டர்’ பட விழாவில் தாயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading