• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • NGK: சூர்யாவின் ரசிகைகளுக்கு சிறப்பு காட்சி... எங்கு தெரியுமா?

NGK: சூர்யாவின் ரசிகைகளுக்கு சிறப்பு காட்சி... எங்கு தெரியுமா?

NGK படத்தின் போஸ்டர்

NGK படத்தின் போஸ்டர்

சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வரும் 31-ம் தேதி சூர்யாவின் ரசிகைகளுக்காக அவரது  நடிப்பில் வெளியாக உள்ள NGK படத்திற்கு மார்ஸ் சினிமாஸ் சிறப்பு காட்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இதனைதொடர்ந்து படத்தின் சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதன்படி தணிக்கையில் இந்தப் படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

    வரும் 31-ம் தேதி படம் வெளியாகவுள்ளது. கேரளாவில் சூர்யாவின் படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கேரளாவில் உள்ள மலப்புறம் மாவட்டம் சங்கரங்குளத்தில் உள்ள மார்ஸ் சினிமாஸ் திரையரங்கில் சூர்யாவின் பெண் ரசிகைகளுக்காக வி1000 லவ்வர்ஸ் லேடீஸ் யூனிட்டும் இணைந்து படத்தை பெண்கள் மட்டும் பார்க்கும் ஒரு ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது சூர்யாவின் ரசிகைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: