Home /News /entertainment /

பரியேறும் பெருமாளைவிட மாரியிடம் ஒரு மிகச்சிறந்த கதை இருக்கிறது- சந்தோஷ் நாராயணன்

பரியேறும் பெருமாளைவிட மாரியிடம் ஒரு மிகச்சிறந்த கதை இருக்கிறது- சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படம்

சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் எழுதிய இரண்டாவது கதை தான், அவரிடம் ஒரு மிகச்சிறந்த கதை உள்ளது என்று சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

    இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனியார் இணையதள ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ``மாரி செல்வராஜிடம் ஒரு மிகச்சிறந்த கதை உள்ளது. பரியேறும் பெருமாள் மாரி எழுதிய இரண்டாவது கதை தான். அவரின் முதல் கதை படமாக வந்தால், அது சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த படமாக இருக்கும். அவரது முதல் கதை படமாகி அனைவரும் பார்க்க வேண்டுமானால், பரியேறும் பெருமாள் வெற்றியடைய வேண்டும் என்று நான் எப்போதும் எண்ணிக்கொண்டே இருந்தேன்.

    கருப்பி பாடலும், மாரி செல்வராஜும் என் இசையையே மாற்றியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மாரியுடன் வேலை செய்தது, எனக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது என்று உருக்கமாகக் கூறினார் சந்தோஷ் நாராயணன்.
    Published by:Ilavarasan M
    First published:

    Tags: Interview, Mari selvaraj, Music director santhosh narayanan, Pariyerum perumal

    அடுத்த செய்தி