Scam 1992: உலக அளவில் கவனம் பெற்ற இந்தியில் வெளியான வெப் சீரிஸ்கள்...!

ஸ்கேம் 1992 வெப் சீரிஸ்

பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையை சொல்லும் சீரிஸ் ஸ்கேம் 1992.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியில் வெளியான வெப் சீரிஸ்கள் பலவும் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான ஸ்கேம் 1992 வெப் சீரிஸ் ஐஎம்டிபி வெளியிட்டுள்ள, டாப் 250 வெப் சீரிஸ்கள் பட்டியலில், 9.2 புள்ளிகள் பெற்று உலக அளவில் 18 வது இடத்தில் உள்ளது. பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையை சொல்லும் சீரிஸ் இது.

அப்படியே தமிழுக்கு வந்தால் கள்ளச்சிரிப்பு போன்ற ஒன்றிரண்டே இங்குள்ள ரசிகர்களை ஓரளவு கவர்ந்த தொடர்கள். இந்திய அளவில் வைத்து பேசுவதற்கும் ஒரு வெப் சீரிஸ் நம்மிடம் இல்லை. இந்நிலையில் மே 20 தமன்னா நடிப்பில் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் வெளியானது. விகடன் டெலிவிஸ்டர இந்தத் தொடரை தயாரித்திருந்தது.

இதனை மினி வெப்சீரிஸ் எனலாம். மொத்தம் ஏழு எபிசோடுகளுடன் இந்த கதை நிறைவுபெறுகிறது. இந்தத் தொடரின் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல்நிலையம் ஒன்றில், வழக்கு விவரங்களை கணினியில் பதிவேற்றுகையில் யாரோ அதனை ஹேக் செய்கிறார்கள். பதிவேற்றும் வேலையை ஒப்பந்த அடிப்படையில் பெற்றிருப்பவர் தமன்னாவின் நண்பர். அந்த டீமில் கணினி குறித்து அதிகம் அறிந்தவர் தமன்னா. யார், எதற்காக ஹேக் செய்தார்கள்?

மறுபுறம், எழுத்தாளரான ஜி.எம்.குமார் அம்னீஷியாவால் தனது நினைவாற்றலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். மருத்துவச் செலவுகளுக்கும், பிற தேவைகளுக்காகவும் அவர்களது பாழடைந்த பூர்வீக வீட்டை விற்க முயல்கிறார் ஜி.எம்.குமாரின் மகளான தமன்னாஇந்நிலையில், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 16 ஆம் தேதி, ஜி.எம்.குமார் அந்த வீட்டிற்கு செல்வார் என்பதை தமன்னா அறிந்து கொள்கிறார். இரண்டொரு நாளில், அதே நவம்பர் 16 பாழடைந்த அந்த வீட்டில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிணத்தருகே ஜி.எம்.குமாரை தமன்னா கண்டுபிடிக்கிறார். அந்தப் பெண் யார்? அவளை கொன்றது ஜி.எம்.குமாரா இல்லை வேறு யாரா? எதற்காக இந்தக் கொலை?

இந்த கதைக்கு நடுவில், ஆனாதை ஆசிரமத்தில் வளர்ந்து, மருத்துவப்படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணராக முடியாமல், போஸ்ட்மார்டம் செய்யும் மருத்துவராகும் பசுபதியின் பின்னணியும் உடன் சேர்கிறது. கூடவே வில்லன்களைப் போல் சில இளைஞர்கள்.

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இந்த கதைகளுடன், தொடரின் ஆரம்பத்தில் காட்டப்படடும், 1995 இல் நடந்த பேருந்து விபத்து எந்த விதத்தில் தொடர்புடையது என்று நம்மை யோசிக்க வைக்கிறது நவம்பர் ஸ்டோரி. கொல்லப்பட்டது யார், எதற்காக இந்தக் கொலை, யார் செய்த கொலை என்பதை கடைசிவரை சஸ்பென்சுடன் நகர்த்துகிறது திரைக்கதை. ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை என அனைத்துத் தொழில்நுட்பங்களும் கதையோடு இயைந்து வருகின்றன. முக்கியமான மார்ச்சுவரி காட்சிகளில் ஒளிப்பதிவு மேலும் திகிலூட்டுகிறது

Also read... Sunny Leone: சன்னி லியோனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் செம்பன் வினோத்!

படத்தின் குறை என்று பார்த்தால், வசனங்களும், நாடகத்தன்மையுடன் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் விதமும். முக்கியமான காவல்நிலையக் காட்சிகள். 'இன்ஸ்பெக்டரை பார்க்கணும்' என்று ஒரு கேரக்டர் கேட்டால், ' இன்ஸ்பெக்டரைப் பார்க்கணுமா? அவர் உள்ள வேற முக்கியமான வேலையில இருக்காரே. நீங்க கொஞ்சம் தள்ளி அங்க வெளியிட் பண்றீங்களா?' நிறுத்தி நிதானித்து இதைச் சொல்லும் போது நாடகம் பார்க்கும் உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. படம் மொத்தமே இந்த தொய்வு இருந்தாலும் தமன்னா, ஜி.எம்.குமார், பசுபதி, அருள்தாஸ் போன்றவர்கள் தங்களின் அனுவத்தாலும், நடிப்பாலும் அதனை சரி செய்கிறார்கள். வழக்கைப் பற்றி போலீஸ்காரர்கள் கூடியிருந்து விவாதிக்கும் காட்சி, குழாயடியில் நடக்கும் உரையாடல் போல அத்தனை அமெச்சூர்.

சினிமாவில் இதுவரைப் பார்த்த தமன்னாவிலிருந்து முற்றிலும் மாறிய கதாபாத்திரம் தமன்னாவுக்கு. சிறப்பாக செய்துள்ளார். அம்னீஷியாவால் பாதிக்கப்பட்ட ஜி.எம்.குமார் அப்பாவியாகவும், 'குழந்த...' என்று காலியான நாற்காலியைப் பார்த்து பேசுகையில் சில்லிடவும் வைக்கிறார். பசுபதி வழக்கம் போல் யதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார். மகள் மீதான பாசத்தில் அவர் செய்யும் காரியம் நம்பும்படி இல்லை. பாசம் கண்ணை மறைக்கும், அறிவையுமா

வித்தியாசமான கதாபாத்திரங்கள், சூழல்களை நேர்த்தியாக இணைத்து நவம்பர் ஸ்டோரியை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் இந்திரா சுப்பிரமணியன். வசனத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, காட்சியில் நாடகத்தன்மையை குறைத்திருந்தால் எவர்கிரீன் ஸ்டோரியாகியிருக்கும். கண்டிப்பாக பார்க்கலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: