’வருத்தமான கணம் என ஒன்று இல்லவே இல்லாததுபோல எல்லாப்படங்களிலும் சிரித்துக்கொண்டிருக்கிறாள்‘ - கவிஞர் மனுஷ்யபுத்திரன் இரங்கல்..

சித்ரா

சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஒரு கவிதையை பதிவு செய்துள்ளார். 

  • Share this:
    ரசிகர்களால் மிக நேசிக்கப்பட்ட நடிகர் சித்ரா உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது கலைஞர்களையும், அவரது ரசிகர்களையும் மிகுந்த அதிர்ச்சியிலும், வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது. சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஒரு கவிதையை பதிவு செய்துள்ளார். 

    “இன்று அதிகாலை
    ஒரு இளம் நடிகை தற்கொலை
    செய்துகொண்டாள்

    அவளது புன்னகைக்கும்
    புகைப்படங்கள் எங்கும் பரவுகின்றன

    அவளுக்கு வருத்தமான கணம் என
    ஒன்று இல்லவே இல்லாததுபோல
    எல்லாப்படங்களிலும் சிரித்துக்கொண்டிருக்கிறாள்
    அந்தப் புன்னகையைத்தவிர
    அவள் எதுவுமே அல்ல
    என்பதுபோலிருக்கிறது

    எங்கும் ஆழமான
    ஒரு பெருமூச்சு பரவுகிறது
    அவளுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள்
    ஒரு மெல்லிய இழப்புணர்வை
    அடைகிறார்கள்
    மேலும் காரணங்கள் குறித்த
    நாடகப்பிரதிகள் எழுதப்படுகின்றன

    ஒரு குளிர்கால விடியலில்
    ஒரு புன்னகை தற்கொலை
    செய்துகொள்கிறது
    ஒருத்தியின் வசீகரம்
    தற்கொலை செய்துகொள்கிறது
    அவளது வயது
    தற்கொலை செய்துகொள்கிறது“ என்னும் கவிதையை அவர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இன்று அதிகாலை
    ஒரு இளம் நடிகை தற்கொலை
    செய்துகொண்டாள்

    அவளது புன்னகைக்கும்
    புகைப்படங்கள் எங்கும் பரவுகின்றன

    அவளுக்கு...

    Posted by Abdul Hameed Sheik Mohamed on Tuesday, December 8, 2020


    ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சி சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, பூவிருந்தவல்லி அருகே, தனியார் ஓட்டலில் அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள ஹேமந்த் ரவி தங்கியுள்ளார். ஈவிபி பூங்காவில் அதிகாலை சூட்டிங் முடித்து விட்டு, தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வந்த சித்ரா புடவையை மின் விசிறியில் மாட்டி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெளியான தகவலில், சித்ரா ஹேமந்த் ரவியிடம், தான் குளிக்கச் செல்வதாகக் கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால், தான் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமந்த் ரவி தெரிவித்துள்ளார்.

    ஆனால், கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது, சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிவியவந்தாகவும் கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடக்க இருந்த நிலையில், ஹேமந்த் ரவியுடன் தங்கியிருந்த நடிகை சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்றும், படப்பிடிப்பில் சித்ராவிற்கு வேறு ஏதும் பிரச்னை இருந்ததா என்றும், ஹேமந்த் ரவியிடம் நசரத் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஹேமந்த் ரவி, சொந்தமாகத் தொழில் செய்துவருகிறார். சித்ரா-ஹேமந்த் ரவியின் திருமணம் பெற்றோரால் முடிவு செய்யப்பட்டு, நிச்சயம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திரைக்கலைஞர்கள் பலரும், சித்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Gunavathy
    First published: