செல்பி பதிவேற்றியது குத்தமா? மனோபாலாவை பதற வைத்த நெட்டிசன்ஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த  செல்பி புகைப்படத்தால் சர்ச்சை எழுந்த நிலையில், அது குறித்து மனோபாலா விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த  செல்பி புகைப்படத்தால் சர்ச்சை எழுந்த நிலையில், அது குறித்து மனோபாலா விளக்கம் அளித்துள்ளார்.

 • Share this:
  பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த  செல்பி புகைப்படத்தால் சர்ச்சை எழுந்த நிலையில், அது குறித்து மனோபாலா விளக்கம் அளித்துள்ளார்.

  இயக்குநர்,  தயாரிப்பாளர்,  நடிகர்  என பன்முகத்தன்மை வாய்ந்தவர்  மனோபாலா.  தமிழில் இதுவரை  900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  முன்னணி நடிகர்கள் பலருடனும் நகைச்சுவை வேடங்களில் மனோபாலா நடித்துள்ளார்.

  ட்விட்டர்  போன்ற சமூக ஊடங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் மனோபாலா,  சக நடிகர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறுவது, புதுப்பட வெளியீடுக்கு வாழ்த்து கூறுவது என எப்போதும் பிஸியாக இருப்பவர்.

  இந்நிலையில், தனது செல்பி புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா வெளியிட்டார்.  படுத்திருக்கும் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்தது மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எண்ணிய நெட்டீசன்கள்,  “என்ன சார் ஆச்சு, கொரோனாவா?, உடல்நிலையை பார்த்துகொள்ளுங்கள்” என  பின்னோட்டம் இட தொடங்கினர்.  விரைவில் நலமடைய வாழ்த்துக்கள் எனவும் சிலர் பதிவிட்டனர்.

     இந்நிலையில், தனக்கு ஒன்றும் இல்லை என மனோபாலா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில்,  “ படுத்து இருப்பது போன்ற புகைப்படத்தை சமீபத்தில் ட்விட்டர் வலைதளத்தில் பதிவேற்றினேன்.  அந்த புகைப்படம் இந்த அளவு வைரலாகும் என எண்ணவில்லை. எனக்கு ஒன்றும் இல்லை. நல்ல நலத்துடன் உள்ளேன்.

  கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்” என தெரிவித்தார்.

  இதேபோல், தனது ட்விட்டர் பக்கத்தில்,  “என் அன்பு மக்களே...நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..ஒண்ணுமில்லை...அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..” என பதிவிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: