முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என் உயிருக்கு ஆபத்து... ‘அசுரன்' நாயகி போலீசில் பரபரப்பு புகார்!

என் உயிருக்கு ஆபத்து... ‘அசுரன்' நாயகி போலீசில் பரபரப்பு புகார்!

நடிகை மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நடிகை மஞ்சுவாரியர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். சமீபத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் ஆவார்.

நடிகை மஞ்சுவாரியர் மலையாள சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் மீது திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் சமூகவலைதளங்களில் என் புகழுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதுடன், அவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகுமார் மேனன் திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் ரிலீஸ் என பல்வேறு கட்டங்களில் என்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அவரது நடத்தை எனக்கு தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் கையெழுத்திட்ட பிளாங்க் செக்குகளை வைத்துக் கொண்டு மோசடி செய்து ஸ்ரீகுமார் என்னை ஏமாற்றினார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.” என்று கூறியுள்ளார்.

மேலும் அவரது புகாரில் தெஹல்ஹா பத்திரிகையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மாத்யூ சாமுவேலின் பெயரையும் குறிப்பிட்டிருப்பதாக தெரிய வருகிறது.

நடிகை மஞ்சு வாரியரின் இந்தக் குற்றச்சாட்டை ஸ்ரீகுமார் மேனன் மறுத்துள்ளார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், “மஞ்சு வாரியர் திரையுலகில் நுழைய சிரமப்பட்ட காலங்களில் அவருக்கு ஆதரவாக இருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவுக்குத் திரும்பிய போது தனக்கு கிடைத்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டார்.

உங்கள் வங்கிக்கணக்கில் ரூ.1500 இருப்பதாக என்னிடம் கூறினீர்கள். அப்போது எங்களது முதல் விளம்பரத்தின் முன் பணமாக நான் உங்களுக்கு ரூ.25 லட்சம் செக் கொடுத்தேன். அப்போது கடவுள் அனுப்பிய தூதர் என்று கூறி கண்ணீர் வடித்தீர்கள்.

உங்களால் எனக்கு நிறைய பேர் எதிரிகளாக மாறினர். உங்களது புகாரை ஊடகங்களின் செய்தியால் அறிந்து கொண்டேன். சட்டப்பூர்வமாக அதை எதிர்கொள்வேன். விசாரணைக்கு ஒத்துழைப்பேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: ரகுல் ப்ரீத் சிங் ஒரு நடிகையின் டைரி...

First published:

Tags: Asuran