ஜனவரியில் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்?

பொன்னியின் செல்வன்

ஜனவரியில் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ், லைகா ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் படத்தின் ஃடைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, தாய்லாந்தில் படப்பிடிப்பை நடத்தியது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு ஆகஸ்ட் மாதத்தில் சினிமா படப்பிடிப்பை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. ஆனாலும் பொன்னியின் செல்வன் படக்குழுவில் நூற்றுக்கும் அதிகமானோர் பணியாற்றி வருவதால் ஷூட்டிங் தொடங்கப்படாமலேயே இருந்தது.

தற்போது ஜனவரியில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 1 மாத காலம் அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதால் நடிகர்களும் சினிமாவை நம்பியிருக்கும் தொழிலாளாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்துக்கு இடையே கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜியை ஜெயேந்திரா உடன் இணைந்து தயாரித்து வருகிறார் மணிரத்னம்.

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்ற ஆந்தாலாஜி உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: