• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Cooku with Comali : குக் வித் கோமாளி சீசன்-3ல் ரக்ஷனுக்கு ஜோடியாக வரப்போகும் ஆங்கர் யார் தெரியுமா?

Cooku with Comali : குக் வித் கோமாளி சீசன்-3ல் ரக்ஷனுக்கு ஜோடியாக வரப்போகும் ஆங்கர் யார் தெரியுமா?

குக்கு வித் கோமாளி

குக்கு வித் கோமாளி

குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் ரக்‌ஷனுடன் சேர்ந்து மணிமேகலையும் தொகுத்து வழங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

  • Share this:
கடந்த 2020ம் ஆண்டு மிக சாதாரணமாக உலக மக்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த வேலையில், கொரோனா எனும் கொடிய வைரஸ் பில்லியன் கணக்கான மக்களை பாதித்தது. மேலும் பல லட்ச கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள், வீட்டில் இருந்தே வேலை, சம்பள பிடித்தம், வேலையிழப்பு என பல விஷயங்கள் கோடிக்கணக்கானோரை அதிக மன அழுத்தத்திற்கு கொண்டு சென்றது. வீட்டில் இருந்து வெளியே கூட போக முடியாமல் இருந்தபோது பொழுதுபோக்கிற்காக மக்கள் தங்கள் கவனத்தை டிவி மற்றும் லேப்டாப், மொபைல் பக்கம் திருப்பினர்.

இந்த சமயங்களில் தான் பல வேடிக்கையான வீடியோக்கள், வேடிக்கையான மனிதர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரே இரவில் பிரபலமான சம்பவங்களும் நிகழ்ந்தது. அதேபோல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் எகோபத்திய வரவேற்பை பெற்றது. அப்படி ஊரடங்கு சமயத்தில் மன அழுத்தத்தில் முடங்கி இருந்து தமிழக மக்களை வாய்விட்டு சிரிக்க வைத்த நிகழ்ச்சி தான் குக்கு வித் கோமாளி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக இந்த ஷோ இருந்தது. CWC முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மாபெரும் வெற்றியடைந்தது.அதிலும், மற்ற சேனல்கள் உட்பட விஜய் டிவியில் ஒளிபரப்பான மற்ற நிகழ்ச்சிகளையும் தாண்டி டிஆர்பி-யில் சாதனை படைத்தது. CWC ஹிட்டாக மாறியதற்கு காரணம் அதில் கலந்து கொண்ட கோமாளிகள் தான். புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, சக்தி, சரத், சுனிதா ஆகியோர் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தனர். கோமாளிகள் மட்டுமல்லாது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களான ஷகீலா, அஸ்வின், கனி, மதுரை முத்து, பாபா மாஸ்டர், பவித்ரா, தர்ஷா ஆகியோருக்கும் இந்த நிகழ்ச்சி மூலம் வேறலெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

Also Read: ’தமிழில் நடிப்பது மகிழ்ச்சி ஆனால் ஒரு வருத்தம்' - சன் டிவி சீரியல் நடிகை அக்ஷிதா


மேலும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்ஷன், நிகழ்ச்சிக்கு ஜட்ஜ்-ஆக வந்த செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. மேலும், மக்களுக்கு மிகவும் பிடித்த இந்த நிகழ்ச்சி முடிவடையும் போது எண்ணற்ற மக்கள் இந்த நிகழ்ச்சியை எந்தளவுக்கு மிஸ் செய்தனர் என்பதையும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில், விரைவில் CWC சீசன்-3 ஆரம்பமாகப் போகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதில் ரக்ஷனுடன் இணைந்து இன்னொரு நபரும் ஆங்கரிங் செய்யபோவதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.Also Read: பாலாவை காதலிக்கிறேனா? குக் வித் கோமாளி ரித்திகா ஓபன் டாக்!

அது வேறுயாருமில்லை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கோமாளியான வி.ஜே மணிமேகலை தான். இவர் கடந்த 2 சீசன்களாக கோமாளியாக வந்து மக்களை சிரிக்க வைத்திருப்பார். குக்கு வித் கோமாளி முதல் சீசனில் ரக்ஷடனுடன் இணைந்து அறந்தாங்கி நிஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் 2வது சீசனில் ரக்ஷன் மட்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்போது சீசன் 3ல் ரக்ஷனுடன் மணிமேகலை இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் கோமாளியாக இருக்கும்போதே சக கண்டெஸ்டண்டுகள், ஜட்ஜ் என அனைவரையும் கலாய்த்து தள்ளுவார். அப்படியானால் வரப்போகும் சீசன் இன்னும் அமர்க்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: