விஜய், விக்ரம், சிம்பு காம்போவில் பொன்னியின் செல்வன்... முயற்சியில் மணிரத்னம்?

இயக்குநர் மணிரத்னம்

விஜய், விக்ரம், சிம்புவை வைத்து தனது கனவு படத்தை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    விஜய், விக்ரம், சிம்புவை வைத்து தனது கனவு படத்தை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்தனர். விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை சிறந்த மல்டி ஸ்டாரர் படமாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். மல்டி ஸ்டாரர் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் மணி ரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.

    முன்னதாக நடிகர் விஜய், மகேஷ்பாபு ஆகியோரிடம் பொன்னியின் செல்வன் கதை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பட்ஜெட் எகிறியதால் அந்த முயற்சியை அப்போது அவர் கைவிட்டார்.

    தற்போது இந்தப் படத்துக்காக நடிகர் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோரை இயக்குநர் மணி ரதனம் அணுகியுள்ளார். மேலும் நடிகர் விஜய்யை தன் அலுவலகத்துக்கு வரவழைத்து ஃபோட்டோ ஷூட் செய்துள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முறை தனது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

     

    மூன்று கேமராக்களை கொண்ட Huawei Mate 20 Pro ஸ்மார்ட்ஃபோன் - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published: