ரஜினிகாந்த் பிறந்தநாள்: யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்...

யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்.

ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று மானாமதுரையில் அவரின் ரசிகர்கள் யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்டனர்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் கேட்ட வரம் தரும் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் வருடா வருடம் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று அரசியலுக்கு வரவேண்டி அவரின் தீவிர ரசிகர் செர்டுபாண்டி என்பவர் அனைவரையும் அழைத்து யாகம் நடத்தி மண் சோறு சாப்பிடுவது வழக்கம்.

  இந்தக் கோவிலில் யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இந்த வருடம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அறிவித்தால் இன்று யாகம் நடத்தி கடைசியாக மண் சோறு சாப்பிட்டு நிவர்த்தி செய்தார்.

  யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்.


  Also read: தந்தையின் கருத்தால் வருத்தமடைந்தேன் - தனது பிறந்தநாளில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த யுவராஜ் சிங்!

  முதலமைச்சர் ஆகவேண்டும் என்றும் தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆளவேண்டும் என்றும் இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் பொது மக்கள் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் முதியோர் இல்லங்களில் நலத்திட்ட உதவிகளும், முதல்வர் ஆகவேண்டி கோவில்களில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. ஆங்காங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவரின் ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: