• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரையரங்குகளுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி கட்டாயம் - மாநாடு பட தயாரிப்பாளர் அதிருப்தி

திரையரங்குகளுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி கட்டாயம் - மாநாடு பட தயாரிப்பாளர் அதிருப்தி

சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி

திரையரங்குகள் உள்ளிட்ட பொதுஇடங்களுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்தியாவில் இதுவரையில் 116 கோடிக்கும் அதிகான டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 40 கோடிக்கும் அதிகமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டைப் பொருத்துவரையில் இதுவரைக்கும் 6.5 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 4 கோடி பேர் முதல் தவணையும், 2.2 கோடி பேர் இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர்.

    தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. திரையரங்குகள், மார்கெட், மால்கள், தெருக்கள் போன்ற இடங்களில் கூடும் மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநாடு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: