• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விரைவில் குணமடையுங்கள் சூர்யா: அன்புடன் தேவா - தளபதி படத்தை நினைவுகூர்ந்து மம்முட்டி ட்வீட்

விரைவில் குணமடையுங்கள் சூர்யா: அன்புடன் தேவா - தளபதி படத்தை நினைவுகூர்ந்து மம்முட்டி ட்வீட்

தளபதி படத்தில் மம்முட்டி, ரஜினிகாந்த்

தளபதி படத்தில் மம்முட்டி, ரஜினிகாந்த்

விரைவில் குணமடையுங்கள் சூர்யா(Get well soon Soorya) என்று தளபதி பட பெயரைக் குறிப்பிடும் வகையில் மலையாள நடிகர் மம்முட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த ' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்தது. அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதேதேரத்தில் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை எனவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் விளக்கமளித்திருந்தனர். இந்தநிலையில், அவருடைய ரத்த அழுத்தம் சீராக இல்லாத நிலையில் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

    ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது. இன்று இரவு அவரது ரத்த அழுத்ததின் நிலையைப் பொறுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ட்விட்டர் பதிவில், ‘விரைவில் குணமடையுங்கள் சூர்யா.. அன்புடன் தேவா’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி படத்தில் ரஜினிகாந்த்தும், மம்முட்டி இணைந்து நடித்திருந்தனர். அதில், இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்களாக நடித்திருந்தனர். அதில், ரஜினியின் பெயர் சூர்யா, மம்முட்டியின் பெயர் தேவா. அதை நினைவுபடுத்தும் வகையில் மம்முட்டி பதிவிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: