மம்மூட்டி படம் வெளியாவதால் திருமண தேதியை மாற்றி வைத்த ரசிகர்..!

”திருமணம் என்பதால் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க முடியாது என்ற காரணத்தால் தன்னுடைய திருமண தேதியை தள்ளி வைத்துள்ளார்”

news18
Updated: November 9, 2019, 2:59 PM IST
news18
Updated: November 9, 2019, 2:59 PM IST
மேமன் சுரேஷ் என்ற நபர் தன்னுடைய திருமணத் தேதியன்று மம்முட்டியின் ’மாமாங்கம்’ படம் வெளியாவதால்  திருமணத் தேதியையே மாற்றியுள்ளார்.

மம்மூட்டியின் ’மாமாங்கம்’ படம் இந்த மாதம் 21 -ம் தேதி தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அன்றைய தேதியில் மேமன் சுரேஷ் என்பவரின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மம்மூட்டியின் தீவிர ரசிகரான மேமன், அவர் நடித்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடுவாராம். இந்நிலையில், படம் ரிலீஸ் ஆகும் அன்று திருமணம் என்பதால் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க முடியாது என்ற காரணத்தால் தன்னுடைய திருமண தேதியை அக்டோபர் 30-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளார்.

தற்போது இருவருக்கும் திருமணம் ஆனதால் தன்னுடைய மனைவியோடு பார்க்கப் போகும் முதல் படமும் மம்முட்டி படம்தான் என்றுக் கூறியுள்ளார்.


Loading...

 
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...