சென்னையில் மாஸ்டர் படம் பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்த மலேசியப் பெண்...!

விஜயை போலவே போஸ் கொடுக்கும் மலேசியா ஆஷ்லினா.

மாஸ்டர் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மலேசியாவில் இருந்து, தான் பறந்து வந்ததாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
விஜய் நடித்த மாஸ்டர் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கடந்த வாரம் முதல் ஓடிடியிலும் வெளியாகி இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது பலநாடுகளில் மாஸ்டர் திரைப்படம் பார்க்க மக்கள் கூட்டம் இன்னமும் அலைமோதிக் கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மலேசியாவில் வாழும் ஆஷ்லினா என்ற பெண்மணி மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர் பலமுறை முயற்சித்தும் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வர முடியவில்லை. இவர் பிறந்து, வளர்ந்து, படித்தது அனைத்துமே சென்னை மயிலாப்பூரில்தான்.



இதையடுத்து நீண்ட முயற்சிக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து சென்னைக்கு தனது குடும்பத்தினருடன் வந்து சேர்ந்தார் ஆஷ்லினா. வந்தவுடன் முதல் வேலையாக தியேட்டரில் மாஸ்டர் படம் பார்ப்பதற்காக சென்றார். ஆனால் டிக்கெட் கிடைக்காத காரணத்தால் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து அண்ணாசாலையில் உள்ள ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார்.

சென்னையில் மாஸ்டர் படம் பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்த மலேசியப் பெண்...


150 இருக்கைகள் கொண்ட அந்த தியேட்டர் மொத்தமாக புக்கிங் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனது உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விசில் அடித்து விஜய்யை கண்டு ரசித்து, மாஸ்டரை கொண்டாடித் தீர்த்தார். அதுமட்டுமல்லாது வெளியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முன்பு நின்று கத்திக் கூச்சலிட்டு விஜய் கத்துவதை போன்று போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ஆஷ்லினா.



மேலும் படிக்க...நடிகை பிரியாமணியின் செம்ம ஹாட் போட்டோஸ்!

மாஸ்டர் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மலேசியாவில் இருந்து, தான் பறந்து வந்ததாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: