ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசுகளின் ஆதிக்கத்தில் மலையாள சினிமா...

வாரிசுகளின் ஆதிக்கத்தில் மலையாள சினிமா...

மலையாள நடிகர்கள்

மலையாள நடிகர்கள்

மலையாள சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் பற்றி நீங்க தெரிந்துக்கொள்ள வேண்டுமா ? அப்ப இதை படியுங்கள்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மலையாள சினிமா மட்டுமில்லை. இந்திய மொழியில் எந்த சினிமாவை எடுத்துக் கொண்டாலும் வாரிசுகள்தான் 80% சதவீதம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். மலையாள சினிமாவின் வாரிசுகள் காம்பினேஷன் பிற மொழிகளைவிட சுவாரஸியமானது

இன்று முன்னணி இளம் நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் மம்முட்டியின் மகன். முதலில் உதவி இயக்குனராக இருந்து நடிகராகியிருக்கிறார் மோகன்லாலின் மகன் ப்ரணவ். நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் என பன்முகங்கள் கொண்ட சீனிவாசனின் மகன் வினீத் பாடகர், நடிகர், வெற்றிகரமான இயக்குனர் என வலம் வருகிறார். பிருத்விராஜும், இந்திரஜித்தும் மறைந்த நடிகர் சுகுமாரனின் மகன்கள். பகத் பாசில் பிரபல இயக்குனர் பகத் பாசிலின் மகன்.

ஜெயராமின் மகன் காளிதாஸும் நடிக்கிறார். மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் 90 சதவீதம் இந்த வாரிசு வட்டத்துக்குள் அடங்கிவிடும்

இதில் மற்ற மொழிகளில் இல்லாத சுவாரஸியம், வாரிசுகளின் சினிமாக்கள். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த பெரும்பாலான படங்களில் சீனிவாசனும் நடித்துள்ளார். பல படங்களுக்கு கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார். இப்போது இவர்களின் வாரிசுகள் ஒன்றிணைந்திருக்கிறார்கள். சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் ப்ரணவும், ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணியிரும் நடிக்கின்றனர். படம், ஹிருதயம். ப்ரணவ் நடித்த இரு படங்களும் சரியாகப் போகவில்லை. இந்நிலையில் வினீத் சீனிவாசனின் படம் ஒரு ப்ரேக்கை தரும் என்று நம்புகிறார்.

இந்தப் பக்கம் வந்தால், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் அபிலாஷ் என்ற இளம் இயக்குனரின், கிங் ஆஃப் கோதா படத்தில் நடிக்கிறார். அபிலாஷ் இயக்குனர் ஜோஷியின் மகன். இந்த ஜோஷியின் இயக்கத்தில் பல வெற்றிப் படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். முக்கியமாக நியூ டெல்லி திரைப்படம். பத்மராஜன் மற்றும் லோகிததாஸ் திரைக்கதையில் ஜோஷி இயக்கத்தில் மம்முட்டி நடித்த படங்கள் அனைத்துமே முக்கியமானவை. கோட்டயம் குஞ்ஞச்சன் திரைப்படத்தில் கடை திறப்பு விழாவுக்கு மோகன்லாலை அழைத்து வருவேன் என்று ஊர்க்காரர்களிடம் சவடால்விட்டு கடைசியில் மம்முட்டி அவர்களை ஏமாற்றுவார்.

மோகன்லால் ஜோஷியின் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், கடை திறப்பு விழாவுக்கு மோகன்லாலை அனுப்ப ஜோஷி மறுத்ததாகவும் அதற்கு காரணம் சொல்வார். மேலும்திகார் ஜெயிலில் தான் இருந்த போது நியூ டெல்லி படப்பிடிப்பு நடத்த பயந்த ஜோஷிக்கு தைரியம் குடுத்த தன்னை ஜோஷி ஏமாற்றிவிட்டதாகவும் கூறுவார். எதற்கு இதை குறிப்பிடுகிறோம் என்றால், திரைப்படத்தில் பெயர் குறிப்பிட்டு பேசும் அளவுக்கு ஜோஷி - மம்முட்டி கூட்டணி பிரபலம். அதேபோல் அவர்கள் இணைந்து உருவாக்கிய நியூ டெல்லி திரைப்படமும்.

Also read : சோ க்யூட்..குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா ?

அந்த ஜோஷியின் மகன்தான் இப்போது மம்முட்டியின் மகனை இயக்குகிறார். நடிகர் லாலும், மம்முட்டியும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். லால் தயாரித்த படத்திலும் மம்முட்டி நடித்துள்ளார். இப்போது லால் ஜுனியர் என்ற பெயரில் லாலின் மகன் படங்கள் இயக்கி வருகிறார். பிக் பி படத்தில் மம்முட்டியுடன் நடிக்கவும் செய்தார்

இது முன்னணி நட்சத்திரங்களின் வாரிசுகள் குறித்த ஒரு மேலோட்டமான சித்திரம். முழுவதையும் சொல்ல மூன்று மணிநேர சினிமா தேவைப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Cinema