• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Poove Unakaga: பூவே உனக்காக சீரியலில் மலையாள பிக்பாஸ் பிரபலம்!

Poove Unakaga: பூவே உனக்காக சீரியலில் மலையாள பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ்  ஸ்ரீனிஷ் அரவிந்த்

பிக்பாஸ் ஸ்ரீனிஷ் அரவிந்த்

மலையாள பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்ட பிரபலமான ஸ்ரீநிஷ் அரவிந்த் பூவே உனக்காக சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார்

  • Share this:
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்த அருண் அண்மையில் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக அஸீம் இணைந்த நிலையில், மற்றொரு பிரபலமும் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. மலையாள பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டு பரவலான வரவேற்பை பெற்ற ஸ்ரீனிஷ் அரவிந்த் தான். இவர் ஏற்கனவே வம்சம் சீரியிலில் நடித்து இருந்தாலும் அதன்பின் மலையாளம் மற்றும் தெலுங்கு ஷோக்களில் கவனம் செலுத்தி வந்தார்.

புதிய திரைப்படங்களிலும் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தமிழ் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள ஸ்ரீனிஷ் அரவிந்த், பூவே உனக்காக சீரியலில் அரவிந்த் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போஸ்ட்டில், “ஒரு நல்ல road a போட்டு நம்ம route a clear பண்ண வேண்டியது தான். Im playing a lead role in "Poove Unakkaga" serial... Today is my entry, so dnt forget to watch "Poove Unakkaga" @ 8pm… 
View this post on Instagram

 

A post shared by Srinish Aravind (@srinish_aravind)


ஸ்ரீனிஷ் வருகையால் கதையில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர் நடித்த முதல் எபிசோட் ஜூன் 17 ஆம் தேதி டிவியில் ஒளிப்பரப்பாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஸ்ரீனிஷ், ரசிகர்களின் அன்பும், ஆதரவும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read:   எந்தவொரு பரீட்சையும் இல்லாமல் ரூ.2.5 லட்சத்திற்கு வேலை.. இந்திய ராணுவம் வழங்கும் பொன்னான வாய்ப்பு!

ஸ்ரீனிஷ் எதிர்பார்த்தது போலவே ரசிகர்களும், சக நடிகர்களும் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துள்ளனர். தன்னுடைய வருகை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகு தொலைபேசி அழைப்புகளும், சமூகவலைதளங்களிலும் வாழ்த்துகள் ஏராளமாக வந்ததாக கூறியுள்ள ஸ்ரீனிஷ், இவ்வளவு அன்பும், வாழ்த்துகளும் கிடைக்கும் என எண்ணவில்லை எனக் கூறியுள்ளார். என் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்துகளை தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ள ஸ்ரீனிஷ், உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக தன்னுடைய முழு உழைப்பையும் கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

Also Read:   இந்திய தபால் துறையின் மாதாந்திர வருமான திட்டம் - அறிய வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

வம்சம் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பு மலையாளம், தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். மலையாளத்தில் பிரணயம் சீரியலில் சரண் கதாப்பாத்திரத்தில் நடித்த அவர், அம்முவின்டே அம்மா சீரியலில் மனோஜ் -ஆக நடித்து பிரபலமானார். சத்யா என் பெண்குட்டி சீரியலில் சுதீப் சந்திரன் கதாப்பாத்திரத்திலும் நடித்து மலையாள சின்னத்திரையில் முக்கிய இடத்தை பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெலுங்கு சீரியலில் நச்சராமி சீரியலில் ஆனந்த் கதாப்பாத்திரத்திலும், ஸ்ரீமந்துடுவில் அகிலாக நடித்தார். வம்சம் சீரியலில் ராஜ் கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகம் பெற்றிருந்தார். மோகன்லால் தொகுப்பாளராக இருந்த பிக்பாஸ் முதல் சீசனில் மனைவியுடன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அவரது மனைவி பியர்ல் மானே மலையாளத்தில் முன்னணி தொகுப்பாளராக உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: