நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம் - திரையுலகினர் அஞ்சலி

நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம் - திரையுலகினர் அஞ்சலி

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி

பழம்பெரும் நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி நேற்று காலமானார். அவருக்கு வயது 98.

  • Share this:
மலையாள திரைப்படங்களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கமல்ஹாசனின் ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் அதிலிருந்து மீண்டு வந்தார். ஆனால் அதன் பின்னர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவிற்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது சமூகவலைதள பக்கத்தில், “73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்கவைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளையவந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்” என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: விசித்திரன் டைட்டில் விவகாரம் - இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மறைந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணிக்கு கோரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: