எனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்
இனவெறி மற்றும் நிற பேதத்தை ஒழிப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

மாளவிகா மேனன்
- News18 Tamil
- Last Updated: June 2, 2020, 11:12 PM IST
அமெரிக்காவின் மினபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்டு, காவல்துறை கைது நடவடிக்கையின் போது கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு மாகாணங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலை சம்பவத்தை கண்டித்து நடைபெற்று வரும் கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவத்தை களமிறக்க உள்ளதாக அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, அமெரிக்காவில் நடைபெற்ற போராட்ட புகைப்படங்களையும், ஜார்ஜ் பிளாய்டு கொலை சம்பவத்தைக் கண்டித்து பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இனவெறி நிறபேதம் குறித்து கருத்து பதிவிட்டிருக்கும் மாளவிகா மோகனன், “எனக்கு 14 வயதாக இருக்கும் போது எனது நெருங்கிய நண்பர் என்னிடம் சொன்னார். அவரது தாயார் ஒரு போதும் தேநீர் குடிக்க விடமாட்டாராம். ஏனென்றால் தேநீர் குடித்தால் தோலின் நிறம் கருமை ஆகும் என்ற வித்தியாசமான நம்பிக்கை அவருக்கு இருந்தது. மேலும் அவர், ஒரு முறை அவரது அம்மாவிடம் தேநீர் கேட்டார். அப்போது, அவரது அம்மா என்னைக்(மாளவிகா மோகனன்) குறிப்பிட்டு, நீ தேநீர் குடித்தால் அவளைப்(மாளவிகா மோகனன்) போன்ற நிறத்துக்கு வந்துவிடுவாய் என்று குறிப்பிட்டார்.
அவர் ஒரு கலரான மகாராஷ்டிரா பையன். நான் மாநிறமுள்ள மலையாளி பெண். அந்தநேரம் வரை எங்களுக்குள் நிறத்தை ஒப்புமைப்படுத்துவது நடைபெற்றதில்லை. இது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால் என்னுடைய நிறத்தை குறைவாகக் குறிப்பிட்டு அதுவரையில் யாரும் பேசி நான் கேட்டதில்லை.
நமது சமுதாயத்தில் சாதரணமாக இனவெறி, நிறபேதம் இருந்துவருகிறது. கருப்பாக இருப்பவர்களை காலா என்று அழைப்பது இங்கு சாதரணமாக இருந்துவருகிறது. தென்இந்தியர்கள் மற்றும் வடகிழக்கு இந்தியர்கள் மீதான பாகுபாடு அச்சம்மூட்டும் ஒன்றாக உள்ளது.கருப்பு நிறம் கொண்டவர்களை நகைச்சுவையாக மதராஸி என்று அழைக்கப்படும் பழக்கம் இருந்துவருகிறது. ஏனென்றால் தென்னிந்தியர்கள் அனைவரும் கருப்பாக இருப்பார்கள் என்று எதுவும் அறியாதவர்கள் நினைக்கிறார்கள். வடகிழக்கு மாநிலத்தவர்களை சிங்கி என்று அழைக்கின்றனர்.
அனைத்து கருப்பின மக்களும் சாதாரணமாக நீக்ரோக்கள் என்றும், வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் அழகானவர்கள் என்றும் சமன்படுத்தப்படுகிறார்கள். கருப்பாக இருப்பவர்கள் அழகற்றவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். உலகளாவிய இனவெறி பற்றி நாம் பேசும் போது நம் வீடுகளிலும், நண்பர் வட்டங்களிலும் நம்மைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இனவெறி மற்றும் நிற பேதத்தை ஒழிப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் அன்பான நபராக இருப்பதுதான் உங்களை அழகான மனிதராக்கும். உடலின் நிறம் அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காக்கா முட்டை பாய்ஸ்
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலை சம்பவத்தை கண்டித்து நடைபெற்று வரும் கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவத்தை களமிறக்க உள்ளதாக அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, அமெரிக்காவில் நடைபெற்ற போராட்ட புகைப்படங்களையும், ஜார்ஜ் பிளாய்டு கொலை சம்பவத்தைக் கண்டித்து பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.