மருத்துவமனை செட்டை கொரோனா நோயாளிகள் பயன்பாட்டு அளித்த ராதே ஷ்யாம் படக்குழு

ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம் படக்குழு மருத்துவமனை அரங்கு அமைத்திருப்பதை அறிந்த தனியார் மருத்துவமனை அவர்களை அணுக, அரங்கில் பயன்படுத்திய அனைத்தையும் அவர்களுக்கு இலவசமாக படக்குழு அளித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்திற்காக போடப்பட்ட மருத்துவமனை அரங்கை கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்கு படக்குழு அளித்துள்ளனர்.

ராதே ஷ்யாம் படம் தெலுங்கு, இந்தியில் தயாராகிறது. இதனை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர். பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் இந்தப் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்க, யுவி கிரியேஷனும், டி சீரிஸும் இணைந்து தயாரிக்கின்றன

இந்தப் படத்துக்காக ஹைதராபாத்தில் 6 கோடி செலவில் மருத்துவமனை அரங்கு அமைத்திருந்தனர். அரங்கு என்பதால் அட்டையில் தயார் செய்யாமல் நிஜமான படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஸ்ட்ரெச்சர்கள், ஸ்டேண்டுகள், உயிர்காக்கும் உபகரணங்கள் ஆகியவற்றால் உருவாக்கியிருந்தனர்.

Also read... மாநாடு சிங்கிள் வெளியீடு தள்ளி வைப்பு - தயாரிப்பாளர் விளக்கம்!

பொதுவாக படப்பிடிப்பு முடிந்ததும், அரங்குக்காக பயன்படுத்திய பொருள்களை வெளி மார்க்கட்டில் விற்பது வழக்கம். ராதே ஷ்யாம் படக்குழு மருத்துவமனை அரங்கு அமைத்திருப்பதை அறிந்த தனியார் மருத்துவமனை அவர்களை அணுக, அரங்கில் பயன்படுத்திய அனைத்தையும் அவர்களுக்கு இலவசமாக படக்குழு அளித்துள்ளது.

இதனால் சுமார் 50 படுக்கைகள் அந்த தனியார் மருத்துவமனைக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. கொரோனா நோயாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர்.  ராதே ஷ்யாம் படக்குழுவின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: