சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போ? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

டாக்டர் பட ஸ்டில்

இப்போதுள்ள சூழலில் படம் ஓடிடியில் வெளியாகவே சாத்தியம். அது அமேசானா இல்லை டிஸ்னியா இல்லை சன் நெக்ஸ்டா என்பதில்தான் தயாரிப்பாளர் குழம்பிப் போயுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் குறித்து தினமும் அப்டேட் கேட்கிறார்கள் ரசிகர்கள். படத்தை தயாரித்திருக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் அப்டேட் என்ற பெயரில் பட வெளியீடு குறித்து ரசிகர்களை மேலும் குழப்பியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை இத்தனை பாதகங்களை ஏற்படுத்தாமல் இருந்திருந்தார், டாக்டர் இந்நேரம் திரையரங்கில் வெளியாகி, ஓடிடியில் ஓடி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெட்டிக்குள் முடங்கியிருக்கும். கொரோனா காரணமாக பட வெளியீட்டை மே மாதத்துக்கு தள்ளி வைத்தனர். கடைசியில் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்தனர். இதற்கு ரசிகர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிருப்தி தெரிவித்தனர். எனினும் போட்ட பணத்திற்கு வட்டி கட்டுகிறவர் தயாரிப்பாளர்தானே.

டாக்டரை டிஸ்னி ஹாட் ஸ்டார் வாங்கியிருப்பதாகவும், அவர்கள் படத்தின் சேட்டிலைட் உரிமையையும் கேட்பதாகவும் ஒரு செய்தி உள்ளது. ஆனால், படத்தின் சேட்டிலைட் உரிமை சன் டிவி வசம் உள்ளது. அவர்கள் அதை தருவதற்கு மறுக்கிறார்கள். இதனால், படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிப் போகிறது. படம் வருமா வராதா என்று ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தை மெயிலால் முற்றுகையிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Also read... அண்ணாத்த... வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த்!

"நீங்க தினமும் டாக்டர் படத்தின் அப்டேட் கேட்கிறீங்க. ஒரு தயாரிப்பாளரா கோவிட் 19 குடுத்த எல்லா பொருளாதார பிரச்சனைகளையும் கடந்து படத்தை தயார் செய்து வைத்திருக்கேன். படத்தின் சரியான வெளியீட்டிற்காக என்னுடைய சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறேன்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் திரையரங்கில் வருமா இல்லை ஓடிடியிலா என்பதற்கு பதிலில்லை. இப்போதுள்ள சூழலில் படம் ஓடிடியில் வெளியாகவே சாத்தியம். அது அமேசானா இல்லை டிஸ்னியா இல்லை சன் நெக்ஸ்டா என்பதில்தான் தயாரிப்பாளர் குழம்பிப் போயுள்ளார். சில தினங்களில் டாக்டரின் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: