நடிகை சித்ரா தற்கொலை பற்றி தீவிர விசாரணை.. விரைவில் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் - சென்னை காவல்துறை ஆணையர்

நடிகை சித்ரா தற்கொலை பற்றி தீவிர விசாரணை.. விரைவில் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் - சென்னை காவல்துறை ஆணையர்

மகேஷ் குமார் அகர்வால், நடிகை சித்ரா.

நடிகை சித்ரா தற்கொலைக்கான காரணம் விரைவில் தெரியவரும் என்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  • Share this:
திருவான்மியூர், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் சாலை போக்குவரத்து சீர்படுத்துவதற்காக அந்த சாலைகளைத் தத்தெடுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அசுத்தமாக இருந்த பகுதிகளைச் சுத்தப்படுத்தி புதிய பேருந்து நிலையம் அமைத்து, அதனைத் திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி இன்று மாலை திருவான்மியூர் பேருந்து நிலையம் பின்புறம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், அதனை திறந்து வைத்து பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சென்னையில் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளைத் தத்தெடுத்து அங்கு போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் நடவடிக்கைகளில் சென்னை காவல்துறை இறங்கி இருப்பதாக கூறினார்.

மேலும் முதற்கட்டமாக சென்னையின் அண்ணா ஆர்ச், ஸ்பென்சர் பிளாசா சிக்னல், திருவான்மியூர் சிக்னல் மற்றும் மாதவரம் ரவுண்டானா ஆகிய நான்கு பகுதிகளில் ஜீரோ பாயிண்ட் (zero point) திட்டத்தைத் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த  ஜீரோ பாயிண்ட்டில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் போடாமல் வரும் வாகன ஓட்டிகள், செல்போன் பயன்படுத்தி வரும் வாகன ஓட்டிகளைப் பிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Also read: ஆ.ராசாவுக்கு திமுக சப்பைக்கட்டு கட்டுவது வெட்கக்கேடானது - அமைச்சர் காமராஜ் காட்டம்

முதற்கட்டமாக சென்னையில் நான்கு முக்கிய இடங்களில் உருவாக்கப்படும் இந்த ஜீரோ பாயிண்டுகள், வரவிருக்கும் நாட்களில் சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் உருவாக்கப்படவுள்ளதாகக் கூறிய அவர், இதற்காக ஒவ்வொரு ஜீரோ பாயிண்டுகளிலும் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

பின்னர், சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், சித்ரா தற்கொலை வழக்கு சம்பந்தமாக அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணையைத் தொடங்கி உள்ளதாக கூறினார். மேலும், தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் எனவும் கூறினார். பின்னர் மாற்றுத்திறனாளிகள், நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொரோனா கிட் வழங்கி ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி குறும்படம் வெளியிட்டார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: