தங்களது முதல் குழந்தையை விரைவில் வரவேற்க தயாராக உள்ள சினிமா பிரபலங்கள்!

முதல் குழந்தையை வரவேற்க தயாராக உள்ள பிரபலங்கள்

தனது முதலாம் ஆண்டு திருமண நாளில் மஹத் தனது மனைவி பிராச்சி கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளிப்படுத்தினார்.

  • Share this:
    ஒரு சில தமிழ் பிரபல தம்பதிகள் விரைவில் பெற்றோர் என்னும் அற்புத பதவியை ஏற்க தயாராகி வருகின்றனர். மஹத் ராகவேந்திரா - பிராச்சி மிஸ்ரா தம்பதி முதல் கீர்த்தி - ஜெய் தனுஷ் வரை தங்களது முதல் குழந்தையை விரைவில் வரவேற்க தயாராகி வரும் தொலைக்காட்சி பிரபல தம்பதிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    மஹத் ராகவேந்திரா - பிராச்சி மிஸ்ரா:



    மங்காத்தா மற்றும் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் பணியாற்றும் பிரபல நடிகர் மஹத். ஸ்டார் விஜயில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 2-விலும் இவர் பங்கேற்றார். கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மதம் இவருக்கும் பிராச்சி மிஸ்ராவிற்கும் திருமணம் நடைபெற்றது.

    ALSO READ |  தல vs தளபதி.. ட்ரெண்டாகும் #PSBB.. வூஹானில் நடப்பது என்ன? - இணையத்தில் இன்றைய ட்ரெண்டிங் இவை தான்

    இந்த ஜோடி விரைவில் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். தனது முதலாம் ஆண்டு திருமண நாளில் மஹத் தனது மனைவி பிராச்சி கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளிப்படுத்தினார். சமீபத்தில் பிராச்சிக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. வெகு விரைவில் பிராச்சி குழந்தையை பெற்றெடுக்க உள்ளார்.

    ஸ்ரீதேவி - அசோக்:



    ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஷியாமாளா என்ற கதாபாத்திரத்திலும், சன் டிவியில் ஒளிபரப்பப்படும் பூவே உனக்காக சீரியலில் தனலட்சுமி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் ஸ்ரீதேவி.

    இவர் அசோக் சிந்தலா என்பவரை கடந்த ஏப்ரல் 14, 2018 அன்று திருமணம் செய்து கொண்டார். இதனிடையே நடிகை ஸ்ரீதேவி மற்றும் கணவர் அசோக் தம்பதி கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று கர்ப்பத்தை அறிவித்தனர். ஸ்ரீதேவியின் வளைகாப்பு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    ALSO READ |  நம்பர் 1 இடத்தில் ரம்யா பாண்டியன்... பத்மா சேஷாத்திரி பள்ளி குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. இன்றைய ட்ரெண்டிங் இவை தான்!

    கீர்த்தி - ஜெய் தனுஷ்:



    நந்தினி, சந்திரலேகா, ஹிட்லர் காரி பெல்லம் போன்ற தொடர்களில் நடித்ததற்காக பிரபலமானவர் கீர்த்தி. கீர்த்தி - ஜெய் தனுஷ் தம்பதி உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் இந்த ஜோடி விரைவில் பெற்றோராக உள்ளனர். மே 9 அன்று அன்னையர் தினத்தில் நடைபெற்ற தனது வளைகாப்பு விழாவின் படங்களுடன் நடிகை கீர்த்தி இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கீர்த்தியின் கணவர் ஜெய் தனுஷ் சஞ்சய் பரந்தமனாக சந்திரலேகாவில் நடித்து பிரபலமானார்.

    ஷாமிலி சுகுமார் - ராஜ்குமார்:



    நடிகை ஷாமிலி சுகுமார் மற்றும் இவரது கணவர் ராஜ்குமார் ஆகியோரும் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். ரோஜா சீரியலில் பிரியாவாகவும், வாணி ராணி சீரியாலில் தேஜஸ்வினியாகவும், ரோமாபுரி பாண்டியன் தொடரில் இளவரசி கலைவாணியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாமிலி சுகுமார்தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது கணவர் ராஜ்குமாரிடம் சிறப்பு பரிசுடன் வெளிப்படுத்தி உள்ளார்.

    உஷா - பிரகாஷ்:



    அழகிய தமிழ் மகள், சக்தி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான பிளாக் பஸ்டர் சீரியல் தெய்வமகள் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார் நடிகை உஷா ஜெகந்நாதம். இவர் பிரகாஷை கடந்த 2020 அக்டோபரில் திருமணம் செய்து கொண்டனர். உஷா தான் கர்ப்பமாக இருக்கும் நற்செய்தியை சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்து கொண்டார். உஷா இப்போது தனது கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில் இருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: