Home /News /entertainment /

காதலியுடன் மஹத்துக்கு நிச்சயதார்த்தம் - யாஷிகாவின் ரியாக்‌ஷன்!

காதலியுடன் மஹத்துக்கு நிச்சயதார்த்தம் - யாஷிகாவின் ரியாக்‌ஷன்!

மஹத் மற்றும் பிராச்சி மிஸ்ரா

மஹத் மற்றும் பிராச்சி மிஸ்ரா

  • News18
  • Last Updated :
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் மஹத் தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    சிம்புவுடன் வல்லவன், காளை உள்ளிட்ட படங்களில் நடித்த மஹத், அஜித்தின் மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஜில்லா, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கடந்த 2018-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர்கள் நடிகை ஐஸ்வர்யா, மஹத், யாஷிகா தான். நிகழ்ச்சியின் போது தனக்குள் ஏற்பட்ட காதலை மஹத்திடம் யாஷிகா வெளிப்படையாக தெரிவித்தார். அதேவேளையில் தன்னை நம்பி வெளியில் மற்றொரு பெண் இருப்பதாக யாஷிகாவிடம் மஹத் தெரிவித்தார்.



    இதையறிந்த பிராச்சி மிஸ்ரா மஹத்தை தான் பிரிந்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பின்னர் நீக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு இருவருடைய மனக்கசப்பும் நீங்கி மீண்டும் காதலர்களானார்கள். இந்நிலையில் தற்போது இருவரது திருமண நிச்சயதார்த்தம் லக்னோவில் நேற்று நடைபெற்றுள்ளது.



     




    View this post on Instagram




     

    👫❤️ #engaged💍


    A post shared by Mahat Raghavendra (@mahatofficial) on






    இத்தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் மஹத். அதற்கு பதிலளித்துள்ள யாஷிகா உங்கள் இருவருக்காக மகிழ்கிறேன். வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.





    நடிகர் மஹத் - யாஷிகா இணைந்து ஒரு படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மஹத்தின் காதலி மிஸ் இந்தியா எர்த் 2002-ம் ஆண்டின் டைட்டில் வின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சாலை விபத்தில் டிவி நடிகைகள் இருவர் மரணம்!



    வீடியோ:மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த நடிகர் விஜய்!

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Mahat, Yashika

    அடுத்த செய்தி