ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாலியல் புகார் விவகாரம்: நானா படேகர்க்கு அமைச்சர் தீபக் கேசர்கர் ஆதரவு

பாலியல் புகார் விவகாரம்: நானா படேகர்க்கு அமைச்சர் தீபக் கேசர்கர் ஆதரவு

தனுஸ்ரீ தத்தா| நானா படேகர்

தனுஸ்ரீ தத்தா| நானா படேகர்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தனுஸ்ரீ தத்தா மற்றும் நானா படேகர் விவகாரத்தில்  மகாராஷ்டிரா அமைச்சர் தீபக் கேசர்கர் நானா படேகருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

  2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஷ்’ படப்பிடிப்பின் போது தன்னிடம் நானா படேகர் தவறாக நடந்து கொண்டாதாக தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றம் சாட்டினார்.

  பாலியல் குற்றச்சாட்டு பாலிவுட் உலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்நிலையில் நானா படேகரை ஆதரிப்பதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார். மாநிலத்தின் புகழ்பெற்ற ஆளுமையான நானா படேகர் சிறந்த சிவ சேனா அமைப்பின் சிறந்த சமூக சேவகர் என்று புகழ்ந்து கூறிய அவர், தனுஸ்ரீ தத்தா ஏன் இத்தனை வருடங்கள் அவர் மீது புகார் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்று கேள்வியும் எழுப்பினார்.

  அமைச்சர் தீபக் கேசர்கர் ”நானா படேகர் நடிகர் மட்டுமல்ல சிறந்த சமூக சேவகர். மாநிலத்திற்கு பெரும் பணியை செய்திருக்கிறார். குற்றச்சாட்டுகளால் அவரின் புகழை மறைக்க முடியாது” என்றும் கூறினார்.

  Published by:Saroja
  First published:

  Tags: Minister Deepak Kesarkar, Nana Patekar, Tanushree Dutta’s Sexual Harassment