• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • போலி செய்தி பரப்பப்படுகிறது - ஹன்சிகா பட இயக்குனர் விளக்கம்!

போலி செய்தி பரப்பப்படுகிறது - ஹன்சிகா பட இயக்குனர் விளக்கம்!

மஹா பட போஸ்டர்

மஹா பட போஸ்டர்

ஹன்சிகாவின் 50 வது படமாக நான்கு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது மஹா திரைப்படம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மஹா படத்தைக் குறித்து பரப்பப்படும் செய்தி போலியானது என்று அப்படத்தின் இயக்குனர் ஜமீல் விளக்கமளித்துள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது மஹா. ஹன்சிகாவின் 50 வது திரைப்படம். நாயகி மையப் படமான இதில், சின்ன வேடம் ஒன்றில் நடிக்க சிம்புவிடம் கேட்கப்பட்டது. அப்போது ஹன்சிகாவுடனான பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து படத்தில் நடிப்பதற்கு சிம்பு சம்மதம் தெரிவித்தார்.

சிம்பு படத்திற்குள் வந்ததும் படத்தின் நிறம் மாறியது. ஈடுபாட்டுடன் அவர் நடிக்க, அவரது கதாபாத்திரத்தை படத்தில் அதிகம் வரும்படி நீட்டித்தனர். பாடல் காட்சி வைத்தனர். கோவா சென்று பல காட்சிகளை படமாக்கினர். ஹன்சிகாவின் 50 வது படமாக இருந்தது, சிம்பு நடிக்கும் படமாக மாறியது, மார்க்கெட் வேல்யூவும் அதிகரித்தது

Also read... தமிழக முதல்வர் ஸ்டாலின் மனித நாகரிகத்தின் உச்சம் - இயக்குனர் பாலா!

மஹா ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக சில நாள்களாக வதந்தி ஓடுகிறது. இதற்கு பதிலளித்திருக்கும் இயக்குனர் ஜமீல், 'இது போலி செய்தி, சிம்பு ரசிகர்களின் ஃபீலிங்ஸ் எனக்குத் தெரியும். நாலு வருடங்கள் பொறுத்தவர்கள் இன்னும் சில தினங்கள் காத்திருங்கள். அப்டேட் வரும்' என்று ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தில் ஹன்சிகா குறித்து ஒரு சொல் இல்லைஆக, சில தினங்கள் சிம்பு, ஹன்சிகா ரசிகர்கள் காத்திருக்கவும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: