சிம்புவும் ஹன்சிகாவும் மேஜிக்கல் ஜோடி - மஹா இயக்குநர்

சிம்பு - ஹன்சிகா

சிம்பு. ஹன்சிகா ஆகியோர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மேஜிக்கல் ஜோடி சிம்பு, ஹன்சிகாவின் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என்று மஹா படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

    நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகி வரும் படம் மஹா. இந்தப் படத்தை ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மணிடம் உதவி இயக்குநராக பணியாற்றி ஜமீல் இயக்கி வருகிறார்.

    ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகளில் சில தினங்களுக்கு முன் கலந்து கொண்டார் நடிகர் சிம்பு. அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.



    சிம்பு, ஹன்சிகா இடம்பெற்ற போஸ்டரை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் இயக்குநரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் ‘சிம்பு மற்றும் ஹன்சிகா ரசிகர்கள் பொறுமையாக இருங்கள். விரைவில் மேஜிக்கல் ஜோடி சிம்பு, ஹன்சிகாவின் போஸ்டர் வெளியிடப்படும்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    Also watch

    Published by:Prabhu Venkat
    First published: