நிஜத்தில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை உபயோகப்படுத்தி சர்ச்சையில் சிக்கிய மாஃபியா!

மாஃபியா பட போஸ்டர்

 • Share this:
  அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் வெளியான மாஃபியா திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

  துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான திரைப்படம் மாஃபியா சேப்டர் 1. திரையரங்குகளை அடுத்து தற்போது இத்திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  கலவையான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படத்தில் போதை மருந்து கடத்தல் செய்பவருடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று கூறி சிலரின் புகைப்படங்களை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

  ஆனால் உண்மையில் கனடாவில் நடந்த புரூஸ் ஆர்தர் என்ற தொடர் கொலையாளியால் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள் தான் அது. ஐந்து பேரின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவரின் குடும்பத்தினர் இது பொறுப்பற்ற செயல் என்று கூறி கண்டித்தனர்.

  இதை அறிந்த அமேசான் நிறுவனம் வருத்தம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியிருந்தாலும் அந்தக் காட்சிகளுடன் அமேசான் பிரைம் தளத்தில் உள்ளது. படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் அந்தக் காட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு, ஊரடங்கு முடிந்தவுடன் அந்தப் புகைப்படங்கள் மறைக்கப்படும் என்றும், எதேச்சையாகத் தான் அந்த புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க: தமிழக அரசுக்கு பாராட்டு... போலீஸ், தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய பாரதிராஜா  Published by:Sheik Hanifah
  First published: