மதுரை மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண உற்சவம்: கலர்ஸ் தமிழில் நாளை சிறப்பு ஒளிபரப்பு

நோய் தொற்று காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் எங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறோம்.

மதுரை மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண உற்சவம்: கலர்ஸ் தமிழில் நாளை சிறப்பு ஒளிபரப்பு
மதுரை மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண உற்சவம்
  • Share this:
தொற்று நோய் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு நேர்மறை சிந்தனை மற்றும் உற்சாகத்தை அளிக்கும் விதமாக பல்வேறு  பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலாச்சார ரீதியிலான பல்வேறு நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழங்கி வருகிறது.

இந்நிலையில் மக்களை மகிழ்விக்கும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேஸ்வரர் - மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண நிகழ்ச்சியை தங்கள் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.


புகழ்பெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்ச்சி முழுவதும் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த புகழ்பெற்ற திருக்கல்யாணமானது மதுரையில் நடைபெறும் 2 வார சித்திரை திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அவர்களை மகிழ்விக்கும் விதமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. பக்தர்களும் பார்வையாளர்களும் திருக்கல்யாண உற்சவத்தை முழுமையாக கண்டுகளிக்கலாம்.வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து மீனாட்சி திருக்கல்யாண உற்சவத்தை நாளை காலை 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள். இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பிரத்யேகமாக ஒளிபரப்புகிறது.

 


பார்க்க :

 
First published: May 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading