ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

100% திரையரங்க அனுமதிக்கு தடைக்கோரிய வழக்கு - 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

100% திரையரங்க அனுமதிக்கு தடைக்கோரிய வழக்கு - 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறலா?

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

   திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கும் பட்சத்தில், காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமா? என தமிழக அரசு பரிசீலிக்க என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கூறியுள்ளது.

  கடந்த அக்டோபர் 31ம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதியளித்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார். தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு உத்தரவும் பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.

  இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியதற்கு தடை கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் M.M. சுந்தரேஷ், S. ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

  கொரோனா காலத்தில், தமிழக திரையரங்குகளில் சமூக இடைவெளி இன்றி 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். எனவே, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி கடந்த 4 ம் தேதி (04.01.21) தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பில் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிய பொது நல மனுக்கள் மீதான விசாரணையில் உள்ளது.

  திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கும் பட்சத்தில், காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமா? என தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசு உரிய முறையில் பரிசீலித்து நல்ல முடிவை திங்கட்கிழமைக்குள் அறிவிப்பார்கள் என உயர்நீதிமன்றம் நம்புகிறது, என்று குறிப்பிட்டு, வழக்கு விசாரணை 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema, Theatre