Home /News /entertainment /

பாரதிராஜா மீது தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

பாரதிராஜா மீது தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

பாரதிராஜா

பாரதிராஜா

திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி, ஆய்வாளரும், புகார்தாரர் நாராயணனும் 6 வாரத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பேசியதற்காக இயக்குநர் பாரதிராஜா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சென்னை சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    கடந்த ஆண்டு கோவையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இயக்குனர் அமீர் பேசியது தொடர்பாக அவர் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக 2018 ஜூன் 21-ம் தேதி சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, தமிழகத்தில் மாவோயிஸ்டு அல்லது நக்ஸலைட்டடு அமைப்புகள் உருவாகும் நிலையை ஏற்படுத்திவிட வேண்டாம் என பேசியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக, இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மறுநாள் அளித்த புகாரில் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் மீதான விசாரணைக்கு தடைகோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் முரளி தாக்கல் செய்த அறிக்கையில், நாராயணன் புகார் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகவும், இதுதவிர திருவல்லிக்கேணி, வடபழனி காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, பாரதிராஜாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதன்பின்னர் திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி, ஆய்வாளரும், புகார்தாரர் நாராயணனும் 6 வாரத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bharathiraja

    அடுத்த செய்தி