முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகை சன்னி லியோனுக்கு ம.பி அமைச்சர் எச்சரிக்கை - 3 நாட்கள் கெடு!

நடிகை சன்னி லியோனுக்கு ம.பி அமைச்சர் எச்சரிக்கை - 3 நாட்கள் கெடு!

Sunny leone

Sunny leone

மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரான நரோதம் மிஸ்ரா, சன்னி லியோனேவின் பாடலுக்காக நடிகைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சன்னி லியோனே நடனத்தில் வெளிவந்துள்ள மியூசிக் ஆல்பம் சாங், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கண்டனம் எழுந்துள்ள நிலையில் மத்திய பிரதேச அமைச்சர், நடிகை சன்னி லியோனேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கெடுவும் விதித்துள்ளார்.

நடிகை சன்னி லியோனே மற்றும் கனிகா கபூர் ஆகியோர் நடனமாடி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரிகம மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இசை ஆல்பம் சாங் Madhuban mein Radhika. நடிகை சன்னி லியோனே இந்த பாட்டுக்காக மிகவும் கவர்ச்சிகரமான நடனத்தை ஆடியிருக்கும் நிலையில் இந்த பாட்டு ரிலீஸ் ஆனதில் இருந்தே கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த இந்து மத சாமியார்கள் சன்னி லியோனேவின் பாட்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகவும், அறுவறுக்கத்தக்க ஆட்டத்தை ராதையின் பெயரால் அரங்கேற்றியிருப்பதாகவும் கூறி இந்த பாட்டை உடனடியாக நீக்க வேண்டும் என அவர்கள் கடந்த சனிக்கிழமையன்று போராட்டத்தில் குதித்தனர்.

' isDesktop="true" id="649771" youtubeid="2WMTWbRuCsc" category="entertainment">

Also read:  டான்ஸ் பயில வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த மாஸ்டர்!

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரான நரோதம் மிஸ்ரா, சன்னி லியோனேவின் பாடலுக்காக நடிகைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சன்னி லியோனே, இந்த பாடலை பாடிய ஷாரிஃப் மற்றும் தோஷி ஆகியோர் இதற்கான பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அடுத்த 3 நாட்களுக்குள் நடிகை சன்னி லியோனே தனது நடன ஆல்பம் சாங்கினை நீக்க வேண்டும் என கெடு விதித்துள்ளதுடன் இல்லையென்றால் அவர் மீது போலீசார் எஃஐஆர் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

Also read:  ஒமைக்ரான் அச்சுறுத்தல்: குழந்தைகளிடையே பாதிப்பு 4 மடங்காக உயர்வு - அலறும் அமெரிக்கா

இது குறித்து அமைச்சர் நரோதம் மிஸ்ரா கூறுகையில், சிலர் தொடர்ந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர். ராதை எங்களின் கடவுள். அவரை நாங்கள் வணங்குகிறோம். அவருக்காக பல இடங்களில் கோவில்கள் உள்ளன. ஷாரிஃப் தனது மதத்தை குறிப்பிட்டு இப்படி ஒரு பாடலை உருவாக்குவாரா? சன்னி லியோனே, ஷாரிஃப் மற்றும் தோஷி ஆகியோர் இதனை புரிந்து கொள்ள வேண்டுமென நான் எச்சரிக்கிறேன். அடுத்த 3 தினங்களில் அந்த பாட்டை அவர்கள் நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Also read:  பெண்கள் தனியாக பயணம் செய்ய தாலிபான்கள் தடை - ஆப்கனில் தொடரும் சர்ச்சை உத்தரவுகள்

அமைச்சரின் எச்சரிக்கையை தொடர்ந்து, சரிகம நிறுவனம் மதுபான் பாட்டின் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை அடுத்த 3 நாட்களுக்குள் மாற்றுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மதுபான் பாட்டு ஏற்படுத்திய சமீபத்திய சர்ச்சைகள் காரணமாகவும், சக நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த பாட்டின்ன் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை மாற்றி அமைக்க இருக்கிறோம். பழைய பாட்டுக்கு பதிலாக புதிய பாடல் அனைத்து தளங்களிலும் அடுத்த 3 நாட்களில் மாற்றப்படும் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

First published:

Tags: Actress Sunny Leone, Sunny Leone