ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நர்ஸ் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான வீடியோ - மன்னிப்பு கேட்க நடிகர் மாதவன்!

நர்ஸ் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான வீடியோ - மன்னிப்பு கேட்க நடிகர் மாதவன்!

நடிகர் மாதவன்

நடிகர் மாதவன்

உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. முதல் அலையை விட தற்போது அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது.

COVID 19 வைரஸின் இரண்டாவது அலைக்கு மத்தியில் படுக்கை, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாததால் மருத்துவ தேவைகளை சமாளிக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் , சினிமா பிரபலங்கள் கொடிய வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தங்கள் பங்கை செய்கிறார்கள். சமூக ஊடகங்களில் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களைக் கொண்ட பல சினிமா பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் மாதவன் ஒரு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதில், ஒரு செவிலியர் உணர்ச்சிவசமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)அந்த வீடியோவில் “செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை குற்றம் சாட்டும் பல வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது புத்தி இருக்கிறதா ? உங்கள் வீடுகளுக்குள் தங்கும்படி நாங்கள் உங்களை கட்டாயப்படுத்தினோம், நீங்கள் அனைவரும் எங்கள் பேச்சைக் கேட்டீர்களா? இந்த சூழ்நிலையைத் தவிர்க்க, கைகளை கழுவவும், முகமூடி அணியவும், வீட்டிற்குள் இருக்கவும் நாங்கள் உங்களிடம் பலமுறை கேட்டோம். உங்களில் யாராவது அதைப் பின்பற்றினீர்களா ? ” அவள் கேள்வி எழுப்பினாள் இப்போதும் எங்கு பார்த்தாலும் கூட்டமாக உள்ளது.

இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது உங்களால் இறைச்சி சாப்பிடாமல் இருக்க முடியாதா? நீங்கள் எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்ற மாட்டீர்கள், ஆனால் அனுமதிக்கப்பட்டவுடன் சிகிச்சை பெற விரும்புகிறீர்களா? டாக்டர்கள், செவிலியர்கள் என்ன தெய்வ பிறவிகளா? அவர்களுக்கு சாகாத வரம் உள்ளதா? அவர்களுக்கும் கொரோனா உள்ளது, செவிலியர்கள் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் பணி செய்வோம் என உறுதியேற்று தான் இந்த வேலையை செய்கிறோம் . நோயாளிகளைக் காப்பாற்ற செவிலியர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை எவ்வாறு தியாகம் செய்கிறார்கள், தினமும் எப்படி பணியாற்றுகிறார்கள் என்று அவர் விளக்கினார்.

Also read... மாஸ் நடிகர்களின் சுமார் படங்களும்... சூப்பர் கலெக்ஷனும்!

எங்கள் மருத்துவமனையில் இதுவரை எண்ணற்றவர்கள் இறந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சி.டி ஸ்கேன் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மருந்தாளுநர்களின் இழப்பு குறித்த அறிக்கை கூட எங்களிடம் இல்லை. நாங்கள் கவனித்த ஒரு நோயாளி இறந்தால் அதிலிருந்து மீள எங்களுக்கு ஒரு வாரம் எடுக்கும், ஆனால் தற்போது ஒரு நாள் 10 நோயாளிகள் இறந்து இறக்கின்றனர். என்னுடன் நேற்று வேலை பார்த்த நர்ஸ் இன்று கொரோனாவால் இறந்து விட்டார்.

இதே நிலை தொடர்ந்தால், நாம் அனைவரும் மூன்றாவது அலையில் இறந்துவிடுவோம். தயவுசெய்து உங்கள் வீட்டிற்குள் இருங்கள், செவிலியர்கள், மருத்துவர்களை குறை கூறாமல் முடிந்த வரை சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், முக கவசம் அணியுங்கள் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள மாதவன், தயவு செய்து எங்களை மன்னியுங்கள். நாங்கள் உங்களுக்கு நித்தியமாக கடன்பட்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Actor Madhavan